twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    #KozhikodeAirCrash ஷாருக்கான் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை.. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

    |

    திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்து குறித்து அறிந்த இந்திய திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் #KozhikodeAirCrash என்ற ஹாஷ்டேக்கில் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களையும் காயம் அடைந்தவர்கள் பிழைக்கவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் முதல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வரை தங்களின் இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    கேரள திரையுலக பிரபலங்கள் இந்த விபத்தால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    ஆழ்ந்த இரங்கல்

    ஆழ்ந்த இரங்கல்

    பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கோழிக்கோடு காரிப்பூர் விமான நிலையத்தில் நேற்று இரவு நடந்த கோர விபத்தில் 19பேர் பலியாகி உள்ள செய்தியை அறிந்து மிகவும் வருத்தப்பட்டு ட்வீட் போட்டுள்ளார். ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும், அன்பானவர்களை இழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

    இதுவும் கடந்து போகும்

    இதுவும் கடந்து போகும்

    இந்த 2020ம் ஆண்டு எண்ணற்ற மக்கள் பரிதாபமாக பல்வேறு பேரழிவுகளால் உயிரிழந்து வருகின்றனர். கேரளாவில் நேற்று மட்டும் நிலச்சரிவு, கொரோனா பாதிப்பு, விமான விபத்து என 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர தனது பிரார்த்தனைகள் என்றும், இதுவும் கடந்து போகும் என்றும் பதிவிட்டுள்ளார்.

    மிகவும் சோகமான நாள்

    மிகவும் சோகமான நாள்

    கோழிக்கோடு விமான விபத்து மற்றும் ராஜாமாலா நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களது குடும்பத்தார் அந்த துயரில் இருந்து மீளவும் தனது பிரார்த்தனைகள் என மலையாள நடிகர் பிருத்விராஜ், இரு விபத்துகளின் புகைப்படங்களையும் பதிவிட்டு, இது ஒரு சோகமான நாள் என ட்வீட் செய்துள்ளார்.

    மகேஷ் பாபு

    மகேஷ் பாபு

    கேரளாவில் நேற்று பெய்த கனமழையால் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்து வந்துள்ளது. முதல் முறை தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், இரண்டாம் முறை தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமான விமானத்தின் முன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 180 பயணிகளுடன் சென்ற விமானம் இப்படியொரு கோர விபத்தை சந்தித்துள்ளது. 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் மகேஷ் பாபு பதிவிட்டுள்ளார்.

    English summary
    From Bollywood actor Shah Rukh Khan to Music composer AR Rahman express their greif and prayers to the Kozhikode air crash.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X