தளபதி விஜய் பாதை சிங்க பாதை.. என்னோட கனவு எல்லாம் இதுதான்.. கேபிஒய் பாலா என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வரும் நிலையில், லோக்கல் சோனு சூட்டாகவே மாறியுள்ளார். பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் அரசியலில் களமிறங்கிய நிலையில், பாலாவும் அதற்காகத்தான் அடி போடுகிறார் என்கிற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
பாஜகவில் பாலா இணைய போகிறார் என்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் விரைவில் இணைய போகிறார் பாருங்கள் என்றெல்லாம் நல்ல உள்ளத்துடன் உதவி செய்யும் ஒரு நபரை ட்ரோல் செய்து வருகின்றனர். அப்படியே அவர் அரசியலுக்கு வந்தாலும் என்ன தப்பு என்றும் பலர் கேட்டு வருகின்றனர்.

கொள்ளையடிக்க நினைப்பவர்களை தவிர்த்து உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அரசியலுக்கு வரலாம் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த, கேபிஒய் பாலா தளபதி விஜய் பாதை சிங்கப் பாதை என்னுடைய பாதை ஒருவழிப்பாதை எனக் கூறியுள்ளார்.
ஆட்டோ வாங்கி கொடுத்த பாலா: இதுவரை ஐந்து ஆம்புலன்ஸ்களை வாங்கிக் கொடுத்து ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாத கிராம மக்களுக்கு உதவி செய்துள்ளார். மூன்று சக்கர வாகனம், பைக் உள்ளிட்டவற்றையும் இல்லாதவர்களுக்கு வழங்கி வந்த பாலா, தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து கணவரை இழந்து வாடும் ஆட்டோ ஓட்டும் பெண்ணுக்கு புதிதாக ஆட்டோ ஒன்றையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அதன் வீடியோவை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தவெகவில் தாவப்போறீங்களா?: கேபிஒய் பாலா கண்டிப்பாக ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இணையத்தான் போகிறார் என கடுமையான விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாலாவிடம் தளபதி விஜய்யின் தவெக கட்சியில் தாவப்போறீங்களா? என்றே கேட்டுள்ளனர். அதற்கு, தளபதி விஜய் பாதை சிங்கப் பாதை என்னுடைய பாதை ஒருவழிப்பாதை எனக் பாலா கூறியுள்ளார். மேலும், தனக்கு அரசியல் எல்லாம் தெரியாது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே தனக்குத் தெரிந்த உதவி செய்யும் விஷயத்தை பாலா செய்து வருகிறார்.
இலவச மருத்துவமனை: சமீபத்தில், பிக் பாஸ் பிரபலமும் பிரபல தொகுப்பாளினியுமான அர்ச்சனா பாலாவை பேட்டி எடுத்தார். அப்போது தனது கனவு ஆசை என்னவென்று சொன்ன பாலா இலவசமாக ஒரு மருத்துவமனையை கட்டித்தர வேண்டும் என்பதுதான் வாழ்நாள் கனவு என்றும் அது நனவாக தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
ஒரு மாணவனை படிக்க வைக்கிறேன்: இன்ஜினியரிங் படிக்க காசு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவனை இன்ஜினியரிங் படிக்க வைத்து வருகிறேன். அவன் ஃபைனல் இயர் முடிக்கப் போகிறான். சமீபத்தில், மருத்துவமனைக்குத் தேவையான வரைபட டிசைன் எல்லாம் அவனே போட்டுத் தரேன் என்றும் மருத்துவமனையையே நான் கட்டித்தரேன் அண்ணா என்றும் கூறியுள்ளார். இலவச மருத்துவமனைக்கு அனுமதி எல்லாம் கிடைத்தால், கூடிய சீக்கிரமே அதற்கான வேலைகளை செய்வேன் எனக் கூறியுள்ளார். பாலாவின் நல்ல மனசை பார்த்த அர்ச்சனா கண்டிப்பா கட்டுவ பாலா என ஊக்கம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











