ஹீரோவாகும் KPY பாலா... கடவுள் போல உதவிய லாரன்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த KPY பாலாவை, அவரது ரசிகர்கள் வள்ளல் பாலா என புகழ்ந்து வருகின்றனர். பலருக்கு தேடி தேடி உதவி செய்யும் பாலா, விரைவில் சினிமாவில் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியான வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவர் பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் டைமிங்கில் இவர் கொடுக்கும் கவுண்டர்களுக்கு அளவே இருக்காது. அதுவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெட்டுக்கிளி என்று சொல்லும் போது, சிரிக்காதவர்களே இருக்க முடியாது. ஆரம்பத்தில் சின்ன சின்ன காமெடியில் வந்து கலக்கிய பாலாவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி திருப்பு முனையாக அமைந்தது.

KPY Bala debuts as a hero with the help of actor Lawrence

KPY பாலா: குக் வித் கோமாளிக்கு பிறகு, விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர், போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுத்தான் இவரை பிரபலமாக்கியது. ஆனால், ஓடி ஓடி பலருக்கு இவர் செய்த உதவி இவரை வான் அளவிற்கு உயர்த்திவிட்டது என்று சொல்லலாம். பெரிய நடிகர்களே உதவி செய்ய தயங்கும் போது, சொற்ப சம்பளம் வாங்கும் இவர் ஏழை எளிய மக்களுக்கு தேடி தேடி உதவி செய்து வருகிறார்.

வள்ளல் பாலா: ஆம்புலன்ஸ் இல்லாத பல கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, ஆதரவற்ற சிறியவர்களை படிக்க வைப்பது மட்டும்மால், ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். அண்மையில் இவர், கழிப்பறை இன்றி தவித்த மாணவர்களுக்காக 15 லட்சம் ரூபாய் செலவில், நடிகர் ராகவா லாரன்சுடன் இணைந்து கழிப்பறை கட்டிக்கொடுத்தார். தற்போது இருவரும் சேர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.

ஹீரோவாகும் பாலா: இந்த நிலையில், பாலா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அண்மையில் ஜீ தமிழில் நடைபெற்ற டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் பைனலில் லாரன்ஸ் சாருடன் நானும் கலந்து கொண்டேன். அப்போது லாரன்ஸ், பாலாவை தான் ஹீரோவாக்க உள்ளதாகவும், இயக்குனர்கள் கதை இருந்தால் தன்னிடம் எடுத்து வாருங்கள் என்றார். இவர் போன்றவர்கள் ஹீரோவானதால் இவரால் பல உதவி செய்ய முடியும் என்றார். அவரே ஒரு பெரிய ஹீரோ அவர் என்னை ஒரு ஹீரோவாக்கி அழகு பார்க்க நினைக்கிறார் என்று நினைக்கும் போது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

என் கடவுள்: பலர் என்னிடம் கேட்பார்கள், நீ நிறைய பேருக்கு உதவி பண்ற உனக்கு யார் உதவி பண்ணுவா என்று கேட்பார்கள். நான் அதற்கு கடவுள் என்று சொல்லுவேன். இன்னைக்கு எனக்கு கடவுள் மாதிரி உதவியது லாரன்ஸ் அண்ணன் தான். என் தகுதிக்கும் என் கனவுக்கும் மீறிய விஷயம் இதெல்லாம். நீங்கள் கொடுத்த நம்பிக்கையாலும், தைரியத்தாலும் இந்த முயற்சியில் இறங்குகிறேன். மக்களே உங்கள் அனைவருக்கும் என் பாதம் தொட்ட நன்றிகள் என உருக்கமாக பேசி உள்ளார். இதையடுத்து லாரன்ஸை நேரில் சந்தித்து அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார். அந்த வீடியோவில் பாலாவை கட்டியணைத்து ஹீரோ சார் என லாரன்ஸ் அறிமுகப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. பாலா ஹீரோவாக உள்ளதை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X