யாரும் அனாதையா சாகக்கூடாது.. அபிநய் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பாலா!

சென்னை: துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகர் அபிநய். அந்த படத்தை தொடர்ந்து ஜங்ஷன் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து, தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்லீரல் பாதிக்கப்பட்டு, உடல் எடை குறைத்து, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

நடிகர் அபினை அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், பேசிய கேபிஒய் பாலா, அபிநய் அவர்களை எனக்கு சில மாதங்களாக தான் தெரியும். ஆனால், என்னிடம் பல விஷயங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். முதலில் அவர் என்னிடம் பேசும் போது எனக்கு, அவர் யாரென்று தெரியவில்லை. அதன் பிறகு புகைப்படத்தை அனுப்பினார். அதைபார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்ன ஆனது என்று விசாரித்த போதுதான், கல்லீரல் பிரச்சனை இருப்பதாகவும் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறினார்.

Abhinay Kpy Bala death
Photo Credit:

நடிகர் அபிநய் நினைவேந்தல்: அடிக்கடி அவர், எனக்கு ஏதோவது நடந்து விடும் என்பது போல தோன்றுகிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். மீண்டும் சினிமாவில் நடித்து விருதுகளை வாங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை அது நடக்காதா என்று கேட்பார். உடனே நான் நீங்கள், நினைத்ததெல்லாம் நடக்கும். விரைவில் குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடிப்பீர்கள் என பல விஷயங்களை கூறி அவருக்கு தனியாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் தங்க வைத்திருந்தேன். அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டுதான் இருந்தது. இரண்டு தினங்களுக்கு முன் வீட்டு வாடகை கட்ட வேண்டும் என எனக்கு மெசேஜ் அனுப்பி இருந்தார். நான் வாடகையே அனுப்பி விட்டேன். வழக்கமாக அவர் ஓகே என்று தான் போடுவார். ஆனால் அன்று 'தேங்க்யூ பிரதர் காட் பிளஸ் யூ' என அனுப்பி இருந்தார். அப்போதே, எதற்காக இவர் இப்படி அனுப்புகிறார் என நான் யோசித்தேன். ஆனால் காலையில் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்ததும். அதைக்கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

கேபிஒய் பாலா: அவருடன் பழகியது கொஞ்ச காலமாக இருந்தாலும் அவர் நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்து இருக்கிறார். யாரும் இல்லாமல் அனாதையாக சாகக்கூடாது, என் சாவுக்கு அனைவரும் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அவரது ஆசைப்படியே அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வந்து இருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. அபிநயின் கடைசி ஆசையாவது நிறைவேற்றிவிட்டேன் என்கிற மனநிறைவு இருக்கிறது. 'ஐ லவ் யூ சார்' நீங்க இல்லை என்றாலும் உங்கள் நினைவு என்றும் இருக்கும் என கே.பி.ஒய் பாலா கண்கலங்கி பேசினார். மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X