ஹிட் பாடல்களை பாடிய பிரபல பாடகரின் பரிதாப நிலை.. தகவல் தெரிந்ததும் உதவிய KPY பாலா
சென்னை: விஜய் டிவி KPY பாலா தான் செய்து வரும் உதவிகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கமான ஒன்றுதான். மருத்துவ செலவு, கல்விக்கு உதவி, சுயதொழில் தொடங்க என பாலாவை யார் தேடி வந்தாலும் அல்லது யாருக்கு உதவி தேவைப்படுகிறது என்று பாலாவுக்கு தெரியப்படுத்தப்பட்டாலும் பாலா அவர்களை தேடிச் சென்று உதவி செய்வதை பழக்கமாக கொண்டுள்ளார்.
பாலாவினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முடியவில்லை என்றாலும், தன்னால் முடிந்த உதவியை மனதார செய்வதில் பாலா ஒரு சிறந்த மனிதராகவே விளங்கி வருகிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பாலா தற்போது பின்னணி பாடகர் ரிச்சர்ட் டின்னுக்கு உதவி செய்துள்ளார். இந்த பாடகர் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
பிரபு தேவா இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் ஹன்சிகா மோத்வானி நடித்த எங்கேயும் காதல் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், இடம்பெற்ற உலகப் புகழ்பெற்ற பாடல் ஆன 'நங்கை' பாடலை பாடியவர் இவர்தான். அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் 'மீசை பியூட்டி' என்ற பாடலையும் பாடியது இவர்தான். இப்படி பல பாடல்களை பாடி தனது வசீகரமான குரலால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் இவர்.

பாடகர் ரிச்சர்ட் பேசுவதற்கு சிரமப்பட்டாலும் பாலாவை பார்த்து பாலாவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை பார்த்ததாகவும், அதில் அவரது காமெடிகள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். குறிப்பாக கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பாலாவின் காமெடி தனக்கு மிகவும் பிடித்தது என்றும் பாலாவிடம் பாடகர் டீச்சர் தெரிவித்துள்ளார்.
பாலா பணம் கொடுத்த போது ரிச்சர்டின் மனைவி அழுது கொண்டே அந்த பணத்தை வாங்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் ரிச்சர்ட் மாதிரியான திறமையான பாடகருக்கு இப்படி ஒரு பரிதாபமான சூழல் ஏற்பட்டு விட்டதே என்று ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் பாலாவிடம் தனிப்பட்ட முறையில் ரிச்சர்ட்டை தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண் முகவரி போன்றவற்றையும் கேட்டு வருகின்றனர். பாலா பகிர்ந்துள்ள இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











