Gandhi Kannadi Public Review: காந்தி கண்ணாடிக்கு பப்ளிக் கொடுக்கும் மார்க்.. KPY பாலா பாஸ் ஆனாரா?
சென்னை: KPY பாலா கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் காந்தி கண்ணாடி. இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் KPY பாலா. இவர் இதற்கு முன்னர் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரது கதாநாயகன் அவதாரம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ரசிகை ஒருவர் கூறும்போது, " KPY பாலா படம் என்பதால் ஜாலியாக இருக்கும் என்று நினைத்து வந்தேன். ஆனால் படத்தின் கிளைமேக்ஸில் அழ வைத்துவிட்டார். படத்தில் தொய்வு என்று எனக்கு எதுவும் தோன்றவில்லை. படம் நன்றாக உள்ளது, தாராளமாக பார்க்கலாம். அழாதவர்கள் கூட படத்தைப் பார்த்தால் அழுது விடுவார்கள் என்பது போல் படம் உள்ளது. பாலாவுக்கு கதாநாயகனாக முதல் படம் என்பது போல எல்லாம் இல்லை. நன்றாக நடித்துள்ளார். கதாநாயகனாக நன்றாக வருவார் என்று தோன்றுகிறது" என்று கூறினார்.

மற்றொரு ரசிகர் கூறும்போது, " KPY பாலாவின் முதல் படம். நன்றாக இருக்கும் என்று வந்தேன். படம் நன்றாக உள்ளது. கதை தான் சிறப்பே.KPY பாலாவுக்காக படம் ஓட வேண்டும். படத்தை நான் எதிர்பார்ப்புடன் பார்க்க வரவில்லை. இது பாலாவின் முதல் படம், இந்த உணர்வு ஒரு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கேட்டால் அப்போது சொல்வார்கள். பாலா நன்றாக வளரனும். இது போன்ற இயக்குநர்கள் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை கொடுக்க வேண்டும். நல்ல கதாநாயகனுக்கு சில மொக்கை கதைகளை கொடுத்துவிடுகிறார்கள்" என்று கூறினார்.
குடும்பமாக பார்க்க பக்காவான படம்: மற்றொருவர் கூறும்போது," காந்தி கண்ணாடி நன்றாக உள்ளது. குடும்பமாக பார்க்க பக்காவான படம். பணம் கொடுத்து ஒரு படம் பார்க்கும்போது நமக்கு திருப்தி இருக்க வேண்டும் அல்லவா, அப்படியான படத்தை கொடுத்துள்ளார் பாலா. இயக்குநர் ஷெரிஃப்ஃபின் இயக்கம் மற்றும் திரைக்கதை அருமை. அவர் கண்டிப்பாக மிகப்பெரிய இயக்குநராக வருவார். பாலாஜி சக்திவேலின் நடிப்பு அமர்க்களம் என்று தெரிவித்தார்.

செம எமோஷனல்: ரசிகை ஒருவர் கூறும்போது, " படத்தில் தொய்வாக எதுவும் இல்லை. பாலாவின் படம் காமெடியாக இருக்கும் என்று வந்தோம். ஆனால் படம் செம எமோஷனல். குடும்பத்துடன் பார்க்கலாம். பாலாவுக்காக பார்க்கலாம். என்னடா... படம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட வரவில்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை படம் நன்றாக போய்க்கொண்டு இருந்தது. நல்ல படம் பார்த்த எண்ணம் இருக்கு என்று தெரிவித்துள்ளார்.
கதையாக நல்ல படம்: இன்னொரு ரசிகர் கூறும்போது, " படம் நன்றாக இருந்தது. முதல் 10 நிமிடங்கள் கொஞ்சம் போர் அடிப்பது போல இருந்தது. ஆனால் படம் போக போக பட்டாசாக இருந்தது. கிளைமாக்ஸ் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. படத்தின் கதையும் நன்றாக கொண்டு போய் இருந்தார்கள். பணமதிப்பிழப்பு போன்றவற்றை எல்லாம் கொண்டு வந்து சிறப்பாக கொண்டு சென்றிருந்தார்கள். காமெடி எனக்கு அந்த அளவுக்கு ஒர்க் ஆகல. ஆனால் கதையாக படம் தரமான படம். எதிர்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்க வந்தேன் நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். ரசிகர்களின் இந்த விமர்சனம் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











