என்ன மனுஷன் ப்பா.. வடிவேலுவே கண்டுக்கல.. வெங்கல் ராவுக்கு உதவிய KPY பாலா

சென்னை: நடிகர் வெங்கல் ராவ் வடிவேலுவின் காமெடி காட்சிகளில் தொடர்ந்து நடித்தவர். வடிவேலு - வெங்கல் ராவ் காம்பினேஷனில் வந்த காமெடி காட்சிகள் இன்றளவும் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை. கடந்த சில வருடங்களாகவே அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். சூழல் இப்படி இருக்க; தனக்கு கை, கால் விழுந்துவிட்டதாகவும்; எனவே உதவி வேண்டும் என்று கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவருக்கு சிம்பு உதவிய நிலையில் இப்போது KPY பாலாவும் உதவியிருக்கிறார்.

சினிமா மீது யாருக்குத்தான் ஆசையில்லை. புகழின் உச்சிக்கு செல்ல வைக்கும் வெகு சில துறைகளில் சினிமாவுக்கு முக்கிய இடம் உண்டு. அதனாலேயே பலரும் சினிமா துறையை விரும்புகிறார்கள். மேலும் பலர் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டியே தீர வேண்டும் என்ற முனைப்பில் சினிமா துறைக்கு வருகிறார்கள். ஆனால் சினிமா எல்லோரையும் அரவணைத்துக்கொள்வதில்லை. அதிலும் துணை நடிகர்களின் பாடு சினிமாவில் பெரும் திண்டாட்டம்தான்.

Vengal Rao Simbu KPY Bala

வெங்கல் ராவ்: அப்படி அடையாளம் தெரியாமல் போன துணை நடிகர்களில் ஒருவர்தான் வெங்கல் ராவ். வைகை புயல் என்று ரசிகர்களால் புகழப்படும் வடிவேலு இன்று இருக்கும் உயரம் யாராலும் தொட முடியாததுதான். ஆனால் அவர் இந்த உயரத்துக்கு சென்றதற்கு அவரும், அவரது திறமையும் மட்டுமே முழு காரணம் கிடையாது. அவரது காமெடி காட்சிகளில் அவருடன் நடித்த நடிகர்களும் ஒருவகையில் காரணம். அப்படி வடிவேலு கேங்கில் தவிர்க்க முடியாதவர் வெங்கல் ராவ்.

அதகள காமெடி: வடிவேலுவும், வெங்கல் ராவும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் பலரது ஃபேவரைட். கொரில்லா சிறை காமெடி, தலை மீது கையை வைத்து வடிவேலு மாட்டிக்கொள்ளும் காமெடி, கந்தசாமி திரைப்படத்தில் தேங்காய் பேர காமெடி என இவர்கள் இணைந்து ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். வெங்கல் ராவும் தனது பங்குக்கு அசால்ட்டாக ஸ்க்ரீனில் ஸ்கோர் செய்து போய்க்கொண்டே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vengal Rao Simbu KPY Bala

காணாமல் போன வெங்கல்: தொடர்ந்து வடிவேலுவுடன் நடித்துவந்த அவர் வேறு பல காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார் வெங்கல் ராவ். இந்நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், 'எனக்கு கை, கால் விழுந்துவிட்டது; ரொம்ப கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவி வேண்டும்' என்று உருக்கத்துடன் கோரிக்கை வைத்திருந்தார்.

சிம்பு உதவி: வடிவேலுவுடன் அதிகம் நடித்ததால் அவர் கண்டிப்பாக உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை அவர் எந்த உதவியும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் நடிகர் சிம்புவோ வெங்கல் ராவின் கோரிக்கையை அறிந்தவுடனேயே இரண்டு லட்சம் ரூபாய் அளித்தார். இது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வெங்கலுக்கு உதவிய முதல் ஆள் சிம்பு என்பது கவனிக்கத்தக்கது.

பாலா உதவி: இந்நிலையில் பலருக்கும் உதவிகளை செய்துவரும் KPY பாலாவும் இப்போது வெங்கல் ராவுக்கு உதவியிருக்கிறார். அவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்திருக்கும் அவர், "எனக்கு ரொம்ப பிடித்த நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் அண்ணா உதவி கேட்டதை பார்க்கும்போது எனது மனதே கேட்கவில்லை. எனவே என்னுடைய சொந்த பணத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயை நான் கொடுத்திருக்கிறேன். நீங்களும் உதவுங்கள். சீக்கிரம் அவரை மீண்டும் சினிமாவில் பார்க்க ஆசையாக இருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக வடிவேலுவுடன் நடித்த பாவா லட்சுமணன் உடல்நிலை சரியில்லாதபோதும் பாலா உதவி செய்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Read more about: vengal rao simbu kpy bala
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X