உதவி செய்த லாரன்ஸ்.. காலில் விழுந்த பாலா.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: வந்தவாசியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு KPY பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் சேர்ந்து மாணவர்களுக்கு கழிப்பறை கட்டி கொடுத்து இருக்கிறார்கள் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கேட்டதும் யோசிக்காமல் உதவி செய்த லாரன்சின் காலில் விழுந்து பாலா ஆசிர்வாதம் வாங்கினார்.
கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. இவர் பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் டைமிங்கில் இவர் கொடுக்கும் கவுண்டர்களுக்கு அளவே இருக்காது. அதுவும் குறிப்பாக வெட்டுக்கிளி என்று சொல்லும் போது, சிரிக்காதவர்களே இருக்க முடியாது. ஆரம்பத்தில் சின்ன காமெடியில் வந்த கலக்கிய பாலாவிற்கு, குக் வித் கோமாளி திருப்பு முனையாக இருந்தது. கோமாளி நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதிலும் செய்யும் காமெடிகள் தான் பிரதானமாக இருக்கும்.

KPY பாலா: குக் வித் கோமாளிக்கு பிறகு, விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர், புலிக்குட்டி பாண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு இவரை பிரகாசிக்க வைத்தது. பாலா நடிகர் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் இருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ஆம்புலன்ஸ் இல்லாத பல கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். அதே போல ஆதரவற்ற சிறியவர்களை படிக்க வைப்பது மட்டும்மால், ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்.
காலில் விழுந்த பாலா: தற்போது இவர் 15 லட்சம் செலவில் கழிப்பறை இன்றி தவித்த மாணவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்சுடன் இணைந்து கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ளார். இதன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட KPY பாலா, வந்தவாசியில் உள்ள அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி இல்லை என்று, கட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் எனக்கு கடிதம், வந்தது. இதற்கு 15 லட்சமாவது தேவைப்படும்.ஆனால், என்னால் ரூ 5 லட்சம் தான் கொடுக்க முடியும் என்பதால், லாரன்ஸ் அண்ணாக்கிட்ட கேட்டேன். அவர் உடனே ஒகே சொல்லிவிட்டார் என்று, லாரன்சின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
ராகவா லாரன்ஸ்: இதையடுத்து பேசிய லாரன்ஸ், இந்த வயதில் இது போன்று உதவி செய்யும் மனம் கொண்ட பாலாவை பாராட்ட வேண்டியது நம் கடமை, பாலா செய்த பல உதவிகளை நாம் கண் முன்னால் பார்க்க முடிகிறது. இவர் செய்த உதவி எல்லாமே அவர் உழைத்த சொந்த பணத்தில் இருந்து தான் செய்தார். இனிமேல் அவர் எந்த உதவி செய்தாலும், அதில் ராகவா லாரன்சின் பங்கு நிச்சயம் இருக்கும் என்று அந்த நிகழ்ச்சியில் லாரன்ஸ் பேசினார். நடிகர் லாரன்ஸ். ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பைக் பரிசு: அண்மையில் இவர், பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் இளைஞர் ஒருவர் பைக் இல்லை, ஒரு சைக்கிளுக்கு கூட வழியில்லை, வீட்ல பைக் வாங்க வேண்டும் என்று பத்தாயிரம் ரூபாய் கேட்டால் செருப்பால அடிப்பாங்க என்று பேசி இருந்தார். அது இணையத்தில் வைரலான நிலையில், அந்த இளைஞர் வேலை செய்யம் பெட்ரோல் பங்கிற்கு மாறுவேடத்தில் சென்று, பெட்ரோல் போட்டுவிட்டு, அந்த இளைஞரின் கையில் பைக் சாவியை கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











