KPY Bala: தாடி பாலாஜி இப்படிப்பட்டவரா.. KPY பாலா சொன்ன சீக்ரெட்.. அவருக்கா இந்த நிலைமை?

சென்னை: பல பேருக்கு தன்னிடம் இருக்கும் பணத்தை மொத்தமாக கொடுத்து உதவி வரும் கேபிஒய் பாலாவுக்கே தாடி பாலாஜி இப்படியொரு உதவி செய்துள்ளாரா என்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் விஜய்யுடன் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் தாடி பாலாஜி. பிக் பாஸ் சீசன் 2வில் தனது மனைவி நித்யாவுடன் கலந்து கொண்டார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை பிக் பாஸ் வீட்டில் கமல் சரி செய்ய நினைத்தாலும், அதை விட பெரிய பிரச்சனையாகவே மாறிவிட்டது. தாடி பாலாஜி மோசமானவர், குடிகாரர் என்கிற பிம்பம் மட்டுமே இருந்து வரும் நிலையில், அவருக்குள் இருக்கும் நல்ல மனது பற்றி கேபிஒய் பாலா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

KPY Bala reveals how Thaadi Balaji helps him in earlier days

தெருக்கட்சியில இருக்கேன்: கேபிஒய் பாலா முன்னணி நடிகர்களுக்கு கூட இல்லாத அளவுக்கு பெரிய மனசுடன் செயல்பட்டு வருவது மக்களால் பாராட்டப்பட்டு வந்தாலும், சிலர் பாலா ஏதோ ஃபிராடு செய்கிறார் என்பதை போலவே விமர்சிக்க ஆரம்பித்து வருகின்றனர். மேலும், அவருக்கு பின்னணியில் அரசியல் சப்போர்ட் இருப்பதாகவும் கூறுகின்றனர். சமீபத்தில் அவரிடம் நீங்க எந்த கட்சியில இருக்கீங்க என்றே ஒரு செய்தியாளர் கேட்க தெருக்கட்சியில தான் இருக்கேன் என மூக்கை உடைத்து விட்டார். இங்கே நல்லது செய்தாலும் அதை ட்ரோல் பண்ணுபவர்கள் தான் அதிகம் என்பதாலே பல நடிகர்களும் அமைதி காத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

தாடி பாலாஜி செய்த உதவி: ஆம்புலன்ஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தருவது, மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் செலவு செய்து உதவி செய்வது என கேபிஒய் பாலா குட்டி ஹீரோவாக பெரிய மனம் கொண்டவராக மாறி வரும் நிலையில், அவருக்கே தாடி பாலாஜி உதவி செய்திருப்பதாக பாலாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

டிரெஸ் வாங்கிக் கொடுத்தார்: ஆரம்பத்தில் நல்ல துணி கூட போட்டுக்க இல்லாமல் இருந்த தனக்கு தனது நண்பர் ஒருவரை போய் சந்திக்க தாடி பாலாஜி அண்ணா சொன்னார். அவரிடம் போனால் ஒரு பை நிறைய புதிய துணிகளை தாடி பாலாஜி கொடுக்க சொன்னதாக சொல்லிக் கொடுத்தார். விஜய் டிவியில் இருக்கும் போது தாடி பாலாஜி அண்ணா எனக்கு செய்த உதவி தான் நாமும் காசு வந்தால் சேர்த்துக்கிட்டே போகக் கூடாது என்றும் நல்ல மனிதர்களை சம்பாதித்தால் நல்லா இருக்கலாம் என என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X