twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மா சொல்லை தட்டாதே.. ஷிவானியை பங்கம் பண்ண கலக்கப் போவது யாரு பாலா.. சுரேஷ் தாத்தாவையும் விடல!

    |

    சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியான கடைசி புரமோவில் ஷிவானி நாராயணனை பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார் கலக்கப் போவது யாரு பாலா.

    குக் வித் கோமாளியில் ரகளை செய்து வரும் பாலா, பிக் பாஸ் கொண்டாட்டத்திலும் அதிரடி காட்டியுள்ளார்.

    ஷிவானியை தொடர்ந்து சுரேஷ் தாத்தா, நிஷா, ஜித்தன் ரமேஷ் என பலரையும் வச்சு செய்துள்ளார்.

    அம்மா சொல்லை தட்டாதே

    அம்மா சொல்லை தட்டாதே

    நேற்று வெளியான புரமோவிலேயே பாலா பல போட்டியாளர்களுக்கும் ஒன் லைன்கவுன்ட்டர்கள் கொடுத்து கலாய்த்தார். ஆனால், ஷிவானி பற்றி எதுவுமே சொல்லலையே என ஏங்கிய அவரது ரசிகர்களுக்கு இன்றைய புரமோவில் ஆரம்பமே சரியான கலாய் தான். செவுத்துல போஸ்டர் ஒட்டாதே, அம்மா சொல்லை தட்டாதே, 60 வருஷமா அம்மா சொல்றத கேட்டே வாழ்கிற ஒரு பொண்ணோட கேரக்டர் ஷிவானிக்கு என டோட்டல் டேமேஜ் செய்து விட்டார்.

    பேய் பொம்மை

    பேய் பொம்மை

    அடுத்து பாப்பா கேபி என கேபிரியல்லா பக்கம் போன பாலா, பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண பேய் பொம்மை என வேற லெவலில் ட்ரோல் செய்து வெளுத்து வாங்கி உள்ளார். உனக்குன்னே ஒரு கதை இருக்கு.. தாடி வளர்ந்தா சேவ் பண்ணு, ஐந்து லட்சத்தை பார்த்து செலவு பண்ணு என கேபி பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடியதை கலாய்த்துள்ளார்.

    வாயை தொறந்தா வல்கர்

    வாயை தொறந்தா வல்கர்

    தைவான் தாத்தா என சுரேஷ் தாத்தாவுக்கு அறிமுகம் கொடுத்த பாலா, மம்முட்டி சார் பையன் துல்கர்.. இவர் வாயை தொறந்தாலே வல்கர் என மொட்டை பாஸை மிரட்டி விட்டுவிட்டார். உடனே சுரேஷ் தாத்தா சும்மா விடுவாரா.. நீங்கதான டைரக்டர் சொல்லிக் கொடுங்க என்று கூற, ஐயா மஞ்சகரு மண்ட கொஞ்ச நேரம் சும்மா இருங்க என சிக்சர் அடித்துவிட்டார்.

    வான்டட்டா வந்து வாங்குனா

    வான்டட்டா வந்து வாங்குனா

    சுரேஷ் தாத்தாவை கலாய்த்ததும் நிஷா எழுந்து கைதட்ட, உங்களுக்கும் ஒரு கதை இருக்குன்னு சொல்லி தலையில தாங்குன வான் ட்டட்டா வந்து வாங்குனா என சோலியை முடித்து விட்டார். கடைசியாக ஜித்தனையும் சும்மா விடல, மார்னிங் வந்தா விடிஞ்சி போச்சு.. மானியத்தோடா ஒரு ஸ்லீபேர் கோச் என வச்சு செய்த புரமோ வைரலாகி வருகிறது.

    இவங்க மட்டும் கலாய்க்கலாம்

    இவங்க மட்டும் கலாய்க்கலாம்

    நெட்டிசன்கள் ட்ரோல் செய்யக் கூடாது என அர்ச்சனா அன்பு டிராமாவே போடும் நிலையில், இவங்களே இவங்களை இப்படி பங்கம் பண்ணி கலாய்க்கலாமா? என்றும் நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர். கேபியை பார்த்து பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிய பேய் பொம்மைன்னு நெட்டிசன்களே கலாய்த்து இருக்க மாட்டாங்கன்னும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

    நீங்க வாங்க

    பிக் பாஸ் தமிழ் 5 சீசனில் கலக்கப் போவது யாரு பாலாவை கூட்டிட்டு வாங்க, குக் வித் கோமாளியில் பண்ணுவது போல, பிக் பாஸிலும் காமெடி பண்ணி கலக்கட்டும். இந்த சீசனில் நிஷாவும் ரியோவும் காமெடி பண்ணுவாங்கன்னு எதிர்பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே ஏமாந்து போயிட்டாங்கன்னும் கூறி வருகின்றனர்.

    English summary
    KPY Bala roasted Shivani Narayanan, Gabriella, Nisha, Jithan Ramesh and Suresh in Bigg B oss Kondattam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X