விஜய் அரசியல் குறித்து.. நச்சுனு பேசிய KPY பாலா.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: இலவச ஆம்புலன்ஸ், புயல் நிவாரணம் உதவி, இலவச சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் உதவி, கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருபவர் பாலா. லாரன்சுடன் இணைந்து மாற்றம் என்ற இயக்கத்தை தொடங்கி, பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலா, விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு சரியான பதில் அளித்தார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பலரை சிரிப்பால் மகிழ்வித்தவர் நடிகர் பாலா. ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெட்டுக்கிளி..வெட்டுக்கிளி என புகழுடன் இவர் செய்த அட்டகாசத்தை எப்போது நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியாது.

நல்லமனசுக்காரன்: குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்த பாலா, பல்வேறு இசைவெளியீட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். அதுமட்டுமின்றி சினிமாவிலும் பாலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு, இலவச ஆம்புலன்ஸ் என தேவையான உதவிகளை செய்து வருகிறார். தற்போது இவர், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்சுடன் இணைந்து மாற்றம் என்ற இயக்கத்தை தொடங்கி, பலதரப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
அரசியல் எனக்கு தெரியாது: இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லுரி கண்காட்சியில் கலந்துகொண்ட பாலா, நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாலாவிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாலா, விஜய் அரசியல் பற்றி பேசுவதற்கு தகுதி கிடையாது, அவர் எது செய்தாலும் அதுசரியாகத்தான் இருக்கும் ஒரு பெரிய லெஜண்ட் பற்றி பேசுவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை. எனக்கு போதிய அறிவு இல்லாத காரணத்தால், அரசியலில் இறங்க மாட்டேன். பதவி ஆசை எல்லாம் இல்லை மற்றவர்களுக்கு உதவி செய்தால் போதும். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அழைத்தாலும் அரசியலில் இறங்க மாட்டேன்.
திருமணத்திற்கு பின்னும் தொடரும்: 10 ஆம்புலன்ஸ் தருவதாக இலக்கு வைத்து இருந்தேன், இதுவரைக்கும் 5 ஆம்புலன்ஸ் கொடுத்து இருக்கிறேன். கூடிய விரைவில் 5 ஆம்புலன்ஸ் கொடுத்துவிட்டு அந்த இலக்கை முடித்துவிட்டு அடுத்த இலக்கை தொடருவேன் அதுதான் என் ஆசை. அதற்கு இன்னும் கூடுதலாக உழைத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மக்களுக்கு உதவி செய்கிறேன். திருமணத்திற்கு பிறகும் மக்கள் பணி தொடரும் என்று கூறியுள்ளார். லாரன்சின் மாற்றம் என்ற இயக்கத்தை தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைக்க உள்ளதாக பரவிய வதந்திக்கு பாலா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











