வானத்தைப் போல மனம்.. காலில் விழ யோசிக்காத KPY பாலா.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: KPY பாலா நகைச்சுவைக் கலைஞராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் வளர்ந்துள்ளார். பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள அவர், தற்போது கதாநாயகனாகவும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இவர் தன்னிடத்தில் யாராவது உதவி கேட்டால், அவர்களுக்கு தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டு உதவினார். அப்படி ரூபாய் 8 கோடி மக்களிடத்தில் வசூல் செய்து ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இது தொடர்பாக மக்களுகு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் KPY பாலா விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பிரபலமானவர். வழக்கமாகவே விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஒருவர் அடையாளப்படுகிறார் என்றால், அவர்கள் மக்களுக்கு பிடித்த ஸ்டார்களாக உயர்ந்து விடுகிறார்கள். அப்படியான வரிசையில் நடிகர் KPY பாலா , தனது நகைச்சுவை மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். குறிப்பாக அவரது டைமிங் காமெடிகளுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள்.

நகைச்சுவைக் கலைஞர் என்பதைக் கடந்து அவர் பொதுமக்களுக்கு செய்யும் உதவிக்காகவே பாராட்டுதலுக்குரியவர். இது மட்டும் இல்லாமல், தன்னிடம் இருக்கும் பணத்தை மட்டும் வைத்து உதவி செய்யாமல், தனக்கு தெரிந்தவர்களிடத்திலும் பண உதவி கேட்டு, எப்படியாவது பணத்தை திரட்டி உதவி செய்யக் கூடியவர் KPY பாலா.

KPY Bala Say Thanks to Public Who Helps to rs 8 Crore to Save Baby Life Instagram Video

பாலா: இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, " எனது வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. அதற்கு காரணம் மக்களாகிய நீங்கள் தான். சமீபத்தில் சாஸ்திகா என்ற குழந்தை மிகவும் மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அதன் மருத்துவச் செலவுக்கு ரூபாய் 8 கோடிகள் வேண்டும் என்றும் வீடியோ போட்டிருந்தேன்.

காலில் விழுந்து நன்றி: அந்த வீடியோவைப் பார்த்த நீங்கள் அனைவரும் செய்த உதவியால், ரூபாய் 8 கோடி பணம் கிடைத்து, இப்போது அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு, அவர் நலமாக உள்ளர். அந்த குழந்தை இனிமேல் இந்த பூமியில் நம்முடன் வாழ்வார். நான் போட்ட வீடியோவை பார்த்துவிட்டு பணம் அனுப்பிய அனைவருக்கும் நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் அந்த குழந்தையின் தந்தையும் KPY பாலா மற்றும் பண உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். வீடியோ முடியும்போது உதவிய அனைவருக்கும் பாதம் தொட்ட நன்றிகள் எனவும் கூறுகிறார் பாலா. இந்த வீடியோ காண்போரை நெகிழ வைத்துள்ளது.


பாராட்டுகள்: இந்த வீடியோவைப் பார்த்த பலரும், KPY பாலாவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவித்து வருகிறார்கள். தன்னிடம் இல்லை என்றாலும் மக்களிடத்தில் கேட்டு, பணத்தை திரட்டி உதவி செய்வது எல்லாம் என்றைக்கும் மெச்சத்தகுந்த செயல். சிலர் KPY பாலா விளம்பரத்திற்காக தான் இப்படியான உதவிகளை செய்து வருகிறார் எனக் கூறுகிறார்கள். பேசற வாய் ஆயிரம் பேசும் நீங்கள் தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருங்கள் பாலா. பிறர் பயனுற வாழும் உங்கள் வாழ்வு பலருக்கும் எடுத்துக்காட்டு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X