விஜய் உச்சம்.. நான் மீந்துப் போன மிச்சம்.. கேபிஒய் பாலா ஏன் இப்படி சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி உள்ளார். அதற்கான உறுப்பினர் சேர்க்கை ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில், விஜய் கட்சியில் யார் சேருவார்கள், சினிமாவில் அவரை பார்த்து விசில் அடிக்கும் ரசிகர்கள் எல்லாம் கட்சியில் சேர்வார்களா என மீம்கள் பறந்தன.
மேலும், விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் எல்லாம் ஸ்கூல் புள்ளிங்கோ என்றும் அவர்களுக்கு வாக்காளர் அட்டையே இருக்காது. பின்னர் எப்படி அவர்கள் உறுப்பினர்களாக இணைவார்கள் என்றும் கேட்கப்பட்டன.

தவெக கட்சியில் உறுப்பினராக இணைய குறிப்பாக வாக்காளர் அடையாள எண்ணை பதிவு செய்வது அவசியம் என நடிகர் விஜய் ஃபில்டர் வைத்திருந்த நிலையிலும், சுமார் 30 லட்சம் பேர் இதுவரை அவரது கட்சியில் உறுப்பினர்களாக இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேபிஒய் பாலா: இதுவரை 5 ஆம்புலன்ஸ்களை வழங்கி தன்னால் முடிந்த சேவையை செய்து வருகிறார் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா. சமீபத்தில் படித்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் ஒன்றையும் அவரது வீட்டுக்கே சென்று பரிசாக வழங்கி வந்தார்.
விஜய் அரசியல் குறித்த கேள்வி: விஜய் டிவி புகழ் கேபிஒய் பாலா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் அரசியலில் களம் கண்டு புதிதாக தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் சேர்க்கை ஆப் ஒன்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறதை பற்றி உங்களின் கருத்து என்ன என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது அதற்கு அரசியல் அறிவு எல்லாம் எனக்கு இல்லை என்றும் விஜய் சாருக்கு வாழ்த்து சொல்ற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை, அந்த அளவுக்கு எனக்கு வயசு இல்லை என்று கூறினார்.
அவர் உச்சம்.. நான் மிச்சம்: தொடர்ந்து பத்திரிகையாளர் விஜய் அரசியல் குறித்து பாலாவிடம் கேள்வி எழுப்ப விஜய் சார் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கிறார்.. அவர் ஒரு விஷயத்தை செய்தால் சரியாகத்தான் இருக்கும். நான் மீந்துப்போன மிச்சத்துல இருக்கேன், எங்கிட்ட போய் அவர் பத்தி கேட்கிறீங்களே என்றும் எனக்கு அரசியல் பங்களிப்பு பற்றியெல்லாம் தெரியாது, மக்களுக்கு அன்பளிப்பு கொடுக்க மட்டும் தான் தெரியும் என தனது ஸ்டைலில் பேசி எஸ்கேப் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











