இதுதான் செம போதை.. இன்னும் 10 ஆம்புலன்ஸ் வாங்கித் தருவேன்..கோலிவுட்டின் சோனு சூட்டாக மாறிய KPY பாலா!

சென்னை: கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கே செல்ல முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாவலனாக வந்து பல பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து மக்கள் மனங்களில் இடம்பெற்றார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட்.

தற்போது அதே போன்ற விஷயத்தை விஜய் டிவி மூலம் பிரபலமான KPY பாலா செய்து வருவதை பார்த்து ரசிகர்கள் அவரது கடவுள் உள்ளத்தை பாராட்டி வருகின்றனர்.

KPY Bala turns Kollywood Sonu Sood after presenting free Ambulance to thee needy people

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாப் ஹீரோக்களே சாமானிய மக்களுக்கும் மலைவாழ் கிராம மக்களுக்கும் தேவையான விஷயங்களை செய்ய துணியாத போது தனது சக்திக்கு மீறி தொடர்ந்து ஆம்புலன்ஸ்களை வாங்கி தானமாக வழங்கி வருகிறார் KPY பாலா.

ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த KPY பாலா: சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு முதன் முறையாக ஆம்புலன்ஸ் ஒன்றை கலக்கப் போவது யாரு உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலக்கிய பாலா வாங்கிக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஈரோடு அருகே உள்ள கடம்பூர் மலைவாழ் மக்களுக்காக இன்னொரு இலவச ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்து மக்களின் மனங்களில் இடம்பெற்றுள்ளார்.

என் காசுலயே வாங்கித் தருவேன்: முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்த நிலையில், அரக்கட்டளையை சேர்ந்த அண்ணன் மலைவாழ் மக்கள் 8000 பேர் வாழும் இடத்தில் ஆம்புலன்ஸ் வசதியே இல்லை. பாம்பு கடித்தும், ஹார்ட் அட்டாக் வந்தும், பல பேர் இறக்கின்றனர் எனக் கூறினார்.

KPY Bala turns Kollywood Sonu Sood after presenting free Ambulance to thee needy people

அவருக்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தருவதாக உறுதியளித்து விட்டு அப்ஸ்காண்ட் ஆகிவிட்டேன். வெளிநாடுகள், உள்ளூர் என தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தற்போது ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து விட்டேன். டிரஸ்ட் மூலமாக பலரது காசை வாங்கி தான தர்மம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. நானே உழைத்து சம்பாதித்து, அதில் வரும் பணத்தில் மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என பாலா பேசியது பலருக்கும் பாடமாக அமைந்துள்ளது.

இன்னும் 10 ஆம்புலன்ஸ்: இதுவே எனக்கு செம போதையா இருக்கு, ரசிகர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக ஷோக்கள் கிடைக்குது. அதன் மூலம் வரும் வருமானத்தை என் சக்திக்கு மீறி இப்படி என்னால முடிஞ்ச நல்லா காரியத்துக்கு செலவிடுவது சந்தோஷம். இந்த ஆண்டு இன்னும் 10 ஆம்புலன்ஸ் வாங்கித் தருவேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என கேபிஒய் பாலா பேசியுள்ள நிலையில், ரசிகர்கள் அவரை கோலிவுட் சோனு சூட் என்றே பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X