முதியவரின் கடையை அடித்து நொறுக்கிய காவல்துறை.. கண்டித்த மதுரை முத்து.. ஓடோடி வந்து உதவி செய்த KPY பாலா!
மதுரை: KPY பாலா அவரது நகைச்சுவைக்காக எந்த அளவுக்கு அறியப்படுகிறாரோ, அதே அளவுக்கு அவர் செய்து வரும் உதவிகளாலும் அறியப்படுகிறார். கஷ்டப்படும் மக்கள் குறித்து அவருக்கு தெரிந்தால் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் KPY பாலா. அப்படி அவர் சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த வயதான தம்பதியர், காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்காமல் நடத்திய கடையை, காவல்துறை அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்தும் , அந்த முதியவர் போட்டிருந்த டேபிளை கீழேயும் தள்ளிவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த நகைச்சுவைப் பேச்சாளர் மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " வந்தாரை வாழவைக்கும் ஊர் என்கிறீர்கள்!?? ஒரு ஏழை எளியவனை ,உள்ளூர் மனிதனை வாழ வையுங்கள் .அப்புறம் வெளியே இருந்து வர்றவர்களை வாழ வையுங்கள்.. பாலியல் வன்முறையாளர்கள், போதை ஆசாமிகள், கோடி கோடியாய் சுருட்டுபவர்கள், பொது இடங்களில் குடிகாரன் செய்யும் அக்கிரமங்கள், வட சென்னையில் வட இந்தியர்கள் போலீசை விரட்டியது, ஊடகத்தில் ஆபாசங்களை அள்ளித் தெளிப்பவர்களை, மாற்று மாநில மக்கள் கடை போட்டு சம்பாதிப்பதை,அவர்களையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ காட்டுக்குள் கடை போட்டு 100 ரூபாய் சம்பாதிக்கும்,

ஏழைத் தொழிலாளியை மிரட்டினால் அவன் திரும்ப மிரட்ட மாட்டான் என்ற ஆணவத்தில் செய்யும் கொடுமை இது. போலீஸ் உங்கள் நண்பன் என்று சொல்லிவிட்டு ஒரு சில காவல் அதிகாரி செய்யும் தவறினால் நிரம்பக் காவல் அதிகாரிகளுக்கு கெட்ட பெயர். தயவுசெய்து எளியவனிடமும் மரியாதையும் அன்பும் செலுத்துங்கள் மனிதநேயம் காத்து நில்லுங்கள் புண்ணியம் கிடைக்கும், புனிதம் கிடைக்கும் - மதுரை முத்து" என்று பதிவிட்டிருந்தார்.
உதவிய கேபிஒய் பாலா: இப்படி இருக்கையில் இந்த வீடியோவை KPY பாலாவுக்கும் பலர் அனுப்பி உள்ளனர். காவல் துறையால் அப்புறப்படுத்தப்பட்ட இந்த கடையைப் போல ஜூஸ் கடை வைத்துக் கொடுத்து, மேற்கொண்டு செலவுக்கும் பணம் கொடுத்துள்ளார் KPY பாலா. இது தொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கஷ்டப்பட்டு உழைப்பவருக்காக என்னால் முடிந்த உதவி என்று கேப்ஷனும் இட்டுள்ளார்.

பாராட்டும் விமர்சனமும்: அதைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், விவரம் தெரிந்தவர்கள் சிலர், காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்காமல் மஞ்சு விரட்டு நடத்தப்பட்டுள்ளது. அப்படி நடத்தப்பட்ட இடத்தில் தான் இந்த முதியவர், அனுமதி இல்லாமல் கடை போட்டுள்ளார். அதைத்தான் காவல்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் காவல்துறை அதிகாரி நடந்து கொண்ட விதம் தவறுதான் என்றும் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications