வனிதா கிட்ட யாரு பருப்பும் வேகாது.. மறுபடியும் அசிங்கப்படுத்துறாங்களே.. கன்டன்டே இவங்கதானா?

சென்னை: காமெடி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியிலும் வனிதா விஜயகுமாரை வைத்து சண்டை ஸ்டார்ட் பண்ணி வருகிறது விஜய் டிவி.

ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு சொந்தக்காரியாக உள்ள வனிதா விஜயகுமார், கடந்த ஒரு வருடமாக விஜய் டிவியில் ஏகப்பட்ட புகழையும், வருமானத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார்.

ஏற்கனவே ஒரு புரமோவில் சண்டை வெடித்த நிலையில், இன்னொரு புரமோவிலும் வனிதாவையே சீண்டியுள்ளனர்.

பீட்டர் பாலுடன் பிரிவு

பீட்டர் பாலுடன் பிரிவு

சில மாதங்களுக்கு முன்னதாக பீட்டர் பால் என்பவருடன் நடிகை வனிதா விஜயகுமார் ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்கு இடையே 3வது முறையாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரும், பீட்டர் பால் முதல் மனைவி தொடுத்த வழக்கு பிரச்சனை காரணமாக ஏகப்பட்ட சண்டைகள் வெடித்தன. நல்லா சேர்ந்து வாழ்வாங்கன்னு பார்த்தா இப்போ இருவரும் பிரிந்து விட்டனர்.

கோவானாலே பிரச்சனை தானா?

கோவானாலே பிரச்சனை தானா?

சமீபத்தில் ஆபாச பட நடிகை பூனம் பாண்டே தனது கணவருடன் கோவாவுக்கு ஹனிமூன் சென்றார். 7 ஜென்மங்கள் சேர்ந்து வாழப் போகிறோம் என பீலா உட்ட பூனம், 13 நாட்களிலேயே புருஷனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். அதே போல, ரொமாண்டிக் போட்டோக்களை போட்டு கோவா டூர் அடித்த வனிதாவும் பீட்டரை பிரிந்து விட்டார்.

ஓவர் குடி

ஓவர் குடி

டீ டோட்லர் என பீட்டர் பாலுக்கு சர்ட்டிபிகேட் கொடுத்த அதே வாயால, ஓவர் ஸ்மோக்கிங், ஓவர் குடி என சொல்லி பீட்டர் பாலை கழட்டி விட்ட கதையை ஏகப்பட்ட யூடியூப்களில் விளம்பர இடைவேளைகளுடன் போட்டு அதையும் காசாக்கி விட்டார் வத்திக்குச்சி வனிதா என நடிகை கஸ்தூரி பங்கமாக கலாய்த்து இருந்தார்.

கடுப்பான வனிதா

கடுப்பான வனிதா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஜட்ஜாக இருக்கும் வனிதாவை கேபிஒய் பாலா வெறுப்பேற்றி, அவரது பர்சனல் விஷயங்களை டச் பண்ணி காமெடி என்கிற பெயரில் தொடர்ந்து டார்கெட் பண்ணதை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் வனிதா விஜயகுமார் வெடித்த புரமோவை போட்டு விஜய் டிவி டிரெண்டாக்கியது.

மீண்டும் அசிங்கம்

மீண்டும் அசிங்கம்

இந்நிலையில், இப்போ விஜய் டிவி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புரமோவிலும் வனிதா விஜயகுமாரையே கன்டென்ட்டாக்கி யோகி பாபு போல வேடமிட்ட காமெடியன் கலாய்த்த புரமோவை வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர். மீண்டும் வனிதா விஜயகுமார் அசிங்கப்படுவதை வைத்தே புரமோ போட்டு விஜய் டிவி டி.ஆர்.பியை எகிற வைத்து வருகிறது.

பருப்பு வேகாது

பருப்பு வேகாது

கோலமாவு கோகிலா கான்செப்ட்டை வைத்து காமெடி பண்ணும் புரமோவில், வனிதா அக்காவிடம் இந்த மாச மளிகை ஜாமான் என ஒரு பையை நீட்ட, நீ கொடுத்த பருப்பு வேகவே இல்லை என வனிதா கவுன்ட்டர் கொடுக்க, என் பருப்பு மட்டுமில்லை, ஊர்ல இருக்கிறவன் எவன் பருப்பும் வனிதா அக்காகிட்ட வேகாது என பங்கமாக கலாய்த்து விட்டு செல்கிறார்.

அழுவாரா வனிதா

அழுவாரா வனிதா

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு காமெடி நிகழ்ச்சியை பயன்படுத்தி தொடர்ந்து எல்லாரையும் வைத்து வனிதா அக்காவை காமெடி என்கிற பெயரில் கலாய்க்க விட்டு, கடைசியாக அவரையும் அனிதா போல கண்ணீர் விட்டு கதற விட்டால் இன்னும் டி.ஆர்.பி எகிறும் விஜய் டிவி அதையும் பண்ணும் என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X