இன்னொரு வைல்டு கார்டா? சுரேஷ் தாத்தாவுக்கு பதில் இப்போ யாரு வந்திருக்கா தெரியுமா?

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அடுத்த வைல்டு கார்டு என்ட்ரியை அதிரடியாக இறக்கியுள்ளனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல் இனி ஹோஸ்ட் செய்யப் போவதில்லை என அறிவித்ததுமே வனிதா விஜயகுமார் வெளிநடப்பு செய்தார்.

அவருக்கு பதிலாக கொளுத்திப் போட எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் தாத்தாவை மீண்டும் கொண்டு வந்தனர்.

தாக்குப் பிடிக்காத தாத்தா

தாக்குப் பிடிக்காத தாத்தா

ஆனால், சுரேஷ் தாத்தாவால் எத்தனை நாளைக்கு இவர்களோடு சேர்ந்து கொண்டு 24 மணி நேரமும் கஷ்டப்பட முடியும். வயசாகுதுல்ல அதிலும் இந்த சீசனில் கொடுக்கப்படும் டஃப் டாஸ்க்குகளை தாக்குப் பிடிக்காத தாத்தா ஆளை விடுங்கடா சாமி என அவரும் அதிரடியாக வெளியேறி விட்டார்.

என்டர்டெயின்மென்ட் தேவை

என்டர்டெயின்மென்ட் தேவை

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரொம்ப சீரியஸாக போவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை உற்றுநோக்கிய பிக் பாஸ் டீம் நிகழ்ச்சிக்கு என்டர்டெயின்மென்ட் தேவை என நினைத்தே சதீஷை அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் உள்ளே வந்து பேசவே தெரியாத வாயில்லா பூச்சியாக இருந்து வரும் நிலையில், அடுத்த ஒரு வைல்டு கார்டு என்ட்ரியை களமிறக்கி உள்ளனர்.

இன்னொரு வைல்டு கார்டா?

இன்னொரு வைல்டு கார்டா?

வெறும் 70 நாள் நிகழ்ச்சிக்கு இன்னொரு வைல்டு கார்டு என்ட்ரியா என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஆனால், இப்போ வந்திருப்பவர் நிச்சயம் காமெடிக்கு கியாரண்டி கொடுப்பார் என்பதை புரமோவில் பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர். அப்படி யார் உள்ளே வந்திருக்கார் என தெரியுமா? வேறு யாரும் இல்லை நம்ம கேபிஒய் தீனா தான்.

கேபிஒய் தீனா

கேபிஒய் தீனா

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய தீனா, விஜய் டிவியின் பல நிகழ்ச்சியில் பிராங் காலராகவும் பட்டையை கிளப்பினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் அசத்தினார் தீனா. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அடகுக் கடைக்காரராக வாய்ஸ் கொடுத்து வந்த அவரை உள்ளே பிடித்து போட்டுள்ளனர்.

கலக்கல் புரமோ

கலக்கல் புரமோ

பாலாஜி முருகதாஸுக்கு மட்டுமே கேபிஒய் தீனா உள்ளே போட்டியாளராக வரப் போவது தெரியும் என தற்போது வெளியான புதிய புரமோவில் காட்டி உள்ளனர். தீனாவை பாலா உள்ளே வாங்க என அழைக்க அவர் அசத்தலாக என்ட்ரி கொடுத்ததும் ரம்யா பாண்டியன், அபிராமி, நிரூப் என அனைவருமே சர்ப்ரைஸ் ஆகி விட்டனர்.

உனக்கு பேச தெரியுமா

உனக்கு பேச தெரியுமா

உள்ளே வந்த தீனாவை பார்த்ததுமே சதீஷ் அவரிடம் பேச முயற்சி செய்ய, "சதீஷ் உனக்கு பேச தெரியுமா?" என ஆரம்பமே சதீஷை மாக் செய்து தனது காமெடியை ஆரம்பித்து இருக்கிறார் தீனா. 53வது நாள் ஆகியுள்ள நிலையில், இன்னுமொரு 17 நாட்கள் நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகுது? யார் வெற்றி பெறப் போகிறார் என ரசிகர்கள் ஒரே ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X