அடகுகடைக்காரர் அட்ராசிட்டி.. கேபிஒய் தீனாவின் கலக்கல் காமெடி.. கில்லாடியாய் பேரம் பேசிய சினேகன்!

சென்னை: போலீஸ், திருடன் டாஸ்க் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடந்து வருகிறது.

திருடர்கள் என்றால் அவர்கள் திருடி விற்கும் நகையை வாங்க ஒரு அடகுக் கடைக்காரர் இருக்க வேண்டுமே என்பதற்காக அடகு கடைக்காரர் ஒருவரின் வாய்ஸ் மட்டும் ஒலிக்கிறது.

அதை கேட்டதுமே ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர். மேலும், அவரிடம் சாமர்த்தியமாக பேரம் பேசியது சினேகன் மட்டும் தான் என்றும் கொண்டாடி வருகின்றனர்.

கெஞ்சும் சுஜா

கெஞ்சும் சுஜா

திருடனாக கலக்கிய பாலாஜி முருகதாஸை ஜெயிலில் அடைத்த நிலையில், ஜெயிலில் அடைக்காமாலே சந்து வழியாக அபிராமி உள்ளே போவதை பார்த்து இது ஜெயில்.. இதுக்கு ஒரு மரியாதை கொடுங்க என கெஞ்சும் போலீஸ் அதிகாரியாக இருப்பதை பார்த்து ரசிகர்களுக்கு பாவமாகி விட்டது. அபிராமியும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அவர் அழுது விடுவார் என நினைத்து வெளியேறினார்.

அடகு கடை ஓனர்

அடகு கடை ஓனர்

திருடும் நகைகளையும், பொருட்களையும் அடகு வைக்க ஒரு அடகு கடைக்காரரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி உள்ளார். பிக் பாஸ் குரலுக்கு பிறகு அவர் குரல் மட்டுமே ஒலித்ததை கேட்ட ரசிகர்கள் அவர் யாரென தெரிந்து கொண்டதும் செம குஷியாகி உள்ளனர். அடகு கடைக்காரரா இல்லை காமெடி கிங்கா என்றே தெரியாத அளவுக்கு ஒவ்வொரு பன்ச்-சும் அனல் பறந்தது.

கேபிஒய் தீனா

கேபிஒய் தீனா

விஜய் டிவியில் கலக்கப் போவது யார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரையும் கலாய்த்துத் தள்ளி கைதி படத்தில் லாரி க்ளீனராக மாறிய கேபிஒய் தீனா தான் அடகுக் கடைக்காரராக மாறி உள்ளார். ஆனால், அவரை காட்டவில்லை. தனது குரல் வளத்தாலே ரசிகர்களை கவர்ந்து விட்டார். ஒவ்வொரு போட்டியாளர்களையும் செம கலாய் கலாய்த்து விட்டார்.

பேரம் பேச தெரியாத நிரூப்

பேரம் பேச தெரியாத நிரூப்

தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலேயே தங்கி விளையாடி வந்தாலும், ஒரு பேரம் கூட திறமையாக நிரூப்புக்கு பேசத் தெரியவில்லையே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வெறும் 500 ரூபாய்க்கு மட்டும் பொருளை வியாபாரம் செய்துள்ளார் நிரூப்.

Recommended Video

Bigg Boss Ultimate-ல் Abhishek Raja WILDCARD Entry | BB Ultimate Tamil
சினேகன் சிக்ஸர்

சினேகன் சிக்ஸர்

அதே சமயம் அந்த சிறிய ஒட்டையை பொத்துக் கொண்டு உள்ளே போய் அடகுக் கடைக்காரர் காலில் விழுந்து விடும் அளவுக்கு பேரம் பேசி 3000 ரூபாய் பொருளை 2500க்கு விற்று பாலாவிடம் வந்து அந்த விஷயத்தை கூறி அசத்தி விட்டார் சினேகன். கேபிஒய் தீனாவின் கவுன்ட்டர்கள் மற்றும் மற்ற போட்டியாளர்களை வச்சு செய்த விதம் வேற லெவல் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X