கைதி நடிகர் KPY தீனா திருமணம்.. KPY சரத் வெளியிட்ட கல்யாண புகைப்படங்கள்.. எப்படி இருக்காரு பாருங்க!

சென்னை: கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான தீனா சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திடீரென இன்று காலை திருமணம் செய்துக் கொண்ட தீனாவின் திருமண புகைப்படங்களை கேபிஒய் சரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தீனாவை வாழ்த்தி உள்ளார்.

பிராங்க் கால் செய்து போட்டியாளர்களையும் பிரபலங்களையும் பங்கமாக வச்சு செய்யும் தீனா மாப்பிள்ளை கோலத்தில் அப்படியே செம சாதுவாக இருக்கும் போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன.

KPY Dheena marriage photos shared by KPY Sarath

கேபிஒய் தீனா திருமணம்: 1990 ஜனவரி 27ம் தேதி பிறந்த கேபிஒய் தீனாவுக்கு 33 வயதில் திருமணம் ஆகி விட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபைனலிஸ்ட் ஆனவர் தீனா.

எங்கிட்ட மோதாதே, சிரிப்புடா, அது இது எது, ரெடி ஸ்டெடி போ, பிக் பாஸ் ஜோடிகள் தொகுப்பாளர், பிக் பாஸ் அல்டிமேட் சிறப்பு விருந்தினர் என விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கிய தீனாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ஆனால், தனது திருமணம் பற்றி பலருக்கும் தெரிவிக்காமல் திடீரென இன்று காலை அதிரடியாக திருமணம் செய்துக் கொண்டு மணக் கோலத்தில் காட்சி தந்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஷாக் ஆக்கி உள்ளார்.

கைதி நடிகர்: 2017ம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான ப. பாண்டி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமான தீனாவுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தில் க்ளீனர் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது.

KPY Dheena marriage photos shared by KPY Sarath

படம் முழுக்க ஹீரோ கார்த்தி உடன் காமெடியனாக டிராவல் பண்ணும் காட்சிகளில் கலக்கிய தீனா மாஸ்டர் படத்திலும் சில காட்சிகளில் நடித்திருந்தார். விக்ரம் படத்தில் கமலின் இன்ட்ரோ பாடலான பத்தல பத்தல பாடலுக்கும் காமாட்சியாக வந்து ஆட்டம் போட்டு சென்றிருப்பார் தீனா.

கேபிஒய் சரத் வாழ்த்து: கலக்கப் போவது யாரு தீனாவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கேபிஒய் சரத் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

"இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க என் மனமார்ந்த இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்" என சரத் பதிவிட்ட போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களா? திருமண நாள் வாழ்த்துக்களா என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X