KPY Dheena Marriage Reception: கோட் சூட்டில் கெத்தாக ’கைதி’ KPY தீனா.. கோலாகலமாக நடந்த ரிசப்ஷன்!
சென்னை: இந்த மாதம் ஜூன் 1ம் தேதி கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய நடிகர் தீனாவுக்கு ஆடை வடிவமைப்பாளர் பிரகதி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
சினிமா பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்காமல் திடீரென திருமணத்தை கேபிஒய் தீனா முடித்துக் கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில், கலந்து கொண்ட பிரபலங்கள் தீனாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.
விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, பிக் பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த தீனா கைதி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கேபிஒய் தீனா திருமணம்: திருவாரூரில் பிறந்து வளர்ந்த தீனா விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். அதன் பின்னர் எங்கிட்ட மோதாதே, சிரிப்புடா, அது இது எது, ரெடி ஸ்டெடி போ, பிக் பாஸ் ஜோடிகள், பிக் பாஸ் அல்டிமேட் என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு விஜய் டிவி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி கேபிஒய் தீனாவுக்கும் காஸ்ட்யூம் டிசைனரான பிரகதிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. தீனா திடீரென திருமணம் செய்து கொண்ட நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொள்ளவில்லை.

கிராண்ட் ரிசப்ஷன்: இந்நிலையில், சமீபத்தில் கேபிஒய் தீனா தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்தினார். சின்னத்திரை நடிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு கேபிஒய் தீனாவையும் பிரகதியையும் வாழ்த்தி உள்ளனர்.
தற்போது சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்களை கல்யாண ரிசப்ஷனில் கலந்து கொண்ட பிரபலங்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கோட் சூட்டில் கைதி நடிகர்: தனுஷ் இயக்கி நடித்த ப. பாண்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கேபிஒய் தீனா. குற்றம் செய்யேல், தும்பா, கைதி, மாஸ்டர், புலிக்குத்தி பாண்டி, அன்பறிவு, விக்ரம் மற்றும் டீசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் கேபிஒய் தீனா.
அவரது நெருங்கிய நண்பரான கேபிஒய் சரத் மற்றும் சில பிரபலங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதில், கோட் சூட் உடன் கெத்தாக மாப்பிள்ளையாக தீனா மாஸ் காட்டுகிறார். அவரது மனைவியும் ஒயலட் கலர் திருமண வரவேற்பு உடையில் கலக்கலாக உள்ளார்.
கேபிஒய் பாலா உள்ளிட்ட பலர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், அவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











