கணவருக்கு கார் பரிசளித்த மனைவி.. சந்தோஷத்தின் உச்சியில் கலக்கப் போவது யாரு பிரபலம்!

சென்னை: கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடியன் சரத்துக்கு அவரது மனைவி கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

நீல நிற மாருதி கார் முன்பாக KPY சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

விஜய் டிவி பிரபலங்கள் பலரும் KPY சரத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கலக்கப் போவது யாரு

கலக்கப் போவது யாரு

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் ஏகப்பட்ட சாமானியர்களை சினிமா பிரபலங்களாக மாற்றி வருகிறது. ஜோடி நம்பர் ஒன் டான்சர்களை உருவாக்க, சூப்பர் சிங்கர் பாடகர்களை உருவாக்கி வருகிறது. பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஹீரோ, ஹீரோயினை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்த கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி ஏகப்பட்ட காமெடியன்களை தமிழ் சினிமாவுக்கு தந்து வருகிறது.

பல காமெடியன்கள்

பல காமெடியன்கள்

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலமாக தமிழ் சினிமாவுக்கு ஏகப்பட்ட காமெடியன்கள் கிடைத்துள்ளனர். மேலும், விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இவர்கள் கலக்கி வருகின்றனர். புகழ், KPY பாலா, பழைய ஜோக் தங்கதுரை வரிசையில் KPY சரத்தும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

KPY சரத்

KPY சரத்

கிராமத்தில் இருந்து எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னைக்கு வந்த ஏகப்பட்ட நபர்களில் சரத்தும் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது வித்தியாசமான காமெடி திறமையால் ரசிகர்களை மகிழ் வித்து வரும் சரத், சில படங்களிலும் கமீட் ஆகி உள்ளார்.

மிஸ்டர் அண்ட் மிஸ் சின்னத்திரை

மிஸ்டர் அண்ட் மிஸ் சின்னத்திரை

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பல கெட்டப்புகளை போட்டு தீனாவுடன் அசத்தி வந்த KPY சரத், மிஸ்டர் அண்ட் மிஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தனது மனைவி கிருத்திகாவுடன் வேற லெவலில் காமெடி கலாட்டா செய்து கலக்கி வருகிறார்.

காதலியை மணந்தார்

காதலியை மணந்தார்

கிருத்திகா என்பவரை காதலித்து வந்த KPY சரத் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் நடைபெற்ற அவரது திருமணம் பற்றி அறிந்த விஜய் டிவி பிரபலங்கள் அவரை சமூக வலைதளங்களில் வாழ்த்தினர்.

கார் பரிசு

கார் பரிசு

திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகவுள்ள நிலையில், KPY சரத்துக்கு அவரது மனைவி கிருத்திகா அழகான மாருதி சுசூகி கார் ஒன்றை பரிசாக அளித்தார். அந்த காருடன் இருவரும் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு மனைவிக்கு நன்றி கூறியுள்ளார் KPY சரத்.

வாழ்த்துக்கள் மச்சான்

வாழ்த்துக்கள் மச்சான்

கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி என கலக்கி வந்த விஜய் டிவி புகழ் தல அஜித்தின் வலிமை, சிவகார்த்திகேயனின் டான், சிம்புவின் மாநாடு, அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். KPY சரத் கார் வாங்கிய செய்தியை அறிந்ததும் "வாழ்த்துக்கள் மச்சான்" என கமெண்ட் செய்துள்ளார் புகழ்.

ரக்‌ஷன் ரியாக்‌ஷன்

ரக்‌ஷன் ரியாக்‌ஷன்

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரும் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் இரண்டாவது ஹீரோவுமான விஜே ரக்‌ஷன் KPY சரத் கார் வாங்கியதாக அறிவித்துள்ள போஸ்ட்டுக்கு கீழே ஹாப்பி எமோஜிகளை போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

குட்டி பவானி

குட்டி பவானி

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக கலக்கிய மாஸ்டர் மகேந்திரன், "சூப்பர் மச்சி.. ரொம்ப சந்தோஷம்.. ரெண்டு பேருமே இப்படியே எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்" என வாழ்த்தி கமெண்ட் செய்துள்ளார். மேலும், பல பிரபலங்களும், ரசிகர்களும் KPY சரத்தை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X