இசையமைப்பாளரான பாடகர் க்ருஷ்... சூர்யா தயாரிப்புல ஜாய்ன் ஆகியிருக்காரு
சென்னை : நடிகர் சூர்யாவிற்காக முக்கியமான சில படங்களில் பின்னணி பாடியுள்ளார் பாடகர் க்ருஷ்.
வாரணம் ஆயிரம் படத்தில் வரும் அடியே கொல்லுதே பாடல் இவரது பின்னணியில் விருப்பத்திற்குரிய பாடலாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் க்ருஷ், மியூசிக் டைரக்டராக இணைந்துள்ளார்.

அடியே கொல்லுதே பாடல்
நடிகர் சூர்யாவிற்காக சில பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளார் பாடகர் க்ருஷ். முக்கியமாக வாரணம் ஆயிரம் படத்தில் வரும் அடியே கொல்லுதே பாடல் சூர்யாவிற்காக இவர் பாடியதில் எவர்க்ரீன் பாடலாக கருதப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு ஹிட் நம்பர்களை கொடுத்துள்ளார் க்ருஷ்.

சூர்யா தயாரிப்பில் மியூசிக்
இந்நிலையில் தற்போது அவர் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின்கீழ் இசையமைப்பாளராகியுள்ளார். அரிசில் மூர்த்தி இயக்கத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க புதிய படத்தை சூர்யா தயாரித்து வருகிறார்.

நாட்டுப்புற பாடகர்கள்
இந்த படத்தின் மியூசிக் டைரக்டராக தற்போது க்ருஷ் தனது முதல் படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மொத்தமாக 6 பாடல்கள் உள்ளதாகவும், நாட்டுப்புற பாடல்களும் உள்ளதால், அதில் நிஜ நாட்டுப்புற பாடகர்களை பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உதவிய இசைஞானம்
தன்னுடைய பாடல்கள் சூர்யாவிற்கும் டைரக்டருக்கும் மிகவும் பிடித்துள்ளதாகவும் ரசிகர்கள் எவ்வாறு ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை அறிய மிகவும் ஆவலுடன் உள்ளதாகவும் க்ருஷ் தெரிவித்துள்ளார். மேலும் டைரக்டர் அரிசில் மூர்த்தி இயல்பாகவே இசை ஞானம் கொண்டுள்ளதால் தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

க்ருஷ் பொறுமை
ஏஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்றவர்களுடன் பணியாற்றியுள்ளதால், அதை அனுபவமாக கொண்டு பாடகர்களிடம் வேலை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் டேக்கிலேயே நமக்கு தேவையான பாடல் கிடைத்து விடாது என்றும் பொறுமையுடன் வேலை வாங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











