நட்டாற்றில் கைவிட்டது நினைவிருக்கா? விஷாலை கேள்வியால் ஓடவிட்ட நடிகர் கிருஷ்ணா!
சென்னை: தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து புதிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், ராஜ்மோகனுக்கு திரைப்பட தணிக்கைத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நியமனம் குறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான நடிகர் விஷால் தனது அதிருப்தியை எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில், துறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒருவரிடம், இந்த துறையை ஒப்படைப்பது முறையாக இருக்காது என்று தெரிவித்திருந்தார். என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். முதல்வர் விஜயின் நியமனத்தில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. விஷாலின் இந்த விமர்சனம் துரதிர்ஷ்டவசமானது. விஷாலின் இந்த கருத்துக்கு இயக்குநர் பேரரசு, நடிகர் அருண் விஜய், கவிஞர் ரவிபாரதி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஷாலுக்கு சரியான பதிலடி: இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவும் விஷாலின் கருத்துக்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், "நமது முதலமைச்சரும் இந்த பொறுப்புக்கு புதியவர்தான். ஆனால், அந்த விஷயத்தில் மட்டும் உங்களுக்கு ஏன் எந்தக் கருத்தும் இல்லை? ஒரு பிரச்சனையில் நான் சிக்கியபோது, நீங்கள் என்னை எப்படி நட்டாற்றில் கைவிட்டீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்.
வாய்ப்பு கொடுப்போம்: தேர்தல் முடியும் வரை காத்திருங்கள்' என்று கூறிய நீங்கள், வெற்றி பெற்ற பிறகு அந்த பிரச்சனையிலிருந்து மெதுவாக விலகிச் சென்றுவிட்டீர்கள். அதனால், ஒருவரை விமர்சிப்பதற்கு முன்பு அவருக்கு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ராஜ்மோகனுக்கும் அந்த வாய்ப்பை கொடுப்போம் என்று பதிவிட்டுள்ளார். கிருஷ்ணாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஷாலுக்கு இது நேரடியான பதிலடியாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாசர் வாழ்த்து: விஷால் அமைச்சர் ராஜ் மோகனுக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், நடிகர் சங்கம் சார்பாக தலைவர் நாசர் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications