அவ்வளவு நெருக்கமா இருந்தாங்களே, என்னாச்சோ..? காதலரைப் பிரிந்தார் பிரபல வில்லன் நடிகரின் மகள்!
மும்பை: விளையாட்டு வீரரை காதலித்து வந்த பிரபல நடிகரின் மகள் திடீரென அவரை பிரிந்துவிட்டதாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தமிழில் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து ரஜினிகாந்தின் கோச்சடையான், விஜய்யின் பிகில்,பிரபாஸின் சாகோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இளம் ஆக்ஷன் ஹீரோ
இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் ஜாக்கி ஷெராஃபின் மகன் டைகர் ஷெராஃப், இந்தி சினிமாவின் இளம் ஆக்ஷன் ஹீரோ. உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்கும் அவர், இந்தியில், பாகி, முன்னா மைக்கேல்,
வெல்கம் டு நியூயார்க், பாகி 2, வார் உட்பட பல ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளார்.

கூடைபந்து வீரர்
ஜாக்கி ஷெராஃபின் மகள், கிருஷ்ணா. பல முன்னணி நடிகர்களின் மகள்கள் சினிமாவில் நடிக்க வந்துவிட, கிருஷ்ணா ஷெராஃப் நடிக்க வரவில்லை. தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் பிரபல ஆஸ்திரேலிய கூடைபந்து வீரர் எபான் ஹியம்ஸ் (Eban Hyams) என்பவரை காதலித்து வந்தார்.

தெறிக்க விடுவார்
இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வந்தார் கிருஷ்ணா ஷெராஃப். அதோடு, அரை நிர்வாணப் புகைப் படங்களையும் ஓவர் கிளாமர் ஸ்டில்களையும் வெளியிட்டு நெட்டிசன்ஸ்களை கண்டபடி தெறிக்க விடுவார்.

தொடர்ந்து அப்டேட்
இதுபற்றி நெட்டிசன்ஸ் சரமாரியாக விளாசியும் கண்டுகொள்ளாத கிருஷ்ணா, அதை தொடர்ந்து செய்து வந்தார். இந்த லாக்டவுனில் தனது காதலருடன் இருந்த அவர், புகைப்படங்களை தொடர்ந்து அப்டேட் பண்ணிக் கொண்டிருந்தார். அவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது.

ஒரு வருடம்
ஆனால், விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, எபான் ஹியம்ஸ் கூறியிருந்தார். கடந்த மே மாதம் இருவரும் சந்தித்து ஒரு வருடம் ஆனதை கொண்டாடினர். இந்நிலையில் இருவரும் திடீரென பிரிந்துள்ளனர். இதை கிருஷ்ணா தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போட்டோஸ் டெலிட்
'நானும் அவரும் பிரிந்துவிட்டோம். இனி ரசிகர்கள், எபான் தொடர்பான விஷயங்களை தயவு செய்து எனக்கு டேக் செய்யவேண்டாம் என்று கூறியுள்ளார், கிருஷ்ணா ஷெராஃப். அதோடு அவருடன் இதற்கு முன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து உடனடியாக அவர் நீக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











