‘டிக்டாக்’ பண்ணினால் 5 கிராம் தங்கக்காசு பரிசு.. எந்தப் படத்துக்கு தெரியுமா?

கிருஷ்ணம் படக்குழு டிக்டாக் வீடியோ போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.

Recommended Video

கிரிஷ்ணம் படத்தின் காட்சிகள், பாடல்களுக்கு டிக்டாக் வீடியோ செய்தால் தங்க காசு

சென்னை: விரைவில் ரிலீசாக உள்ள கிரிஷ்ணம் படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு சிறப்பான முறையில் டிக்டாக் வீடியோ எடுத்து அனுப்புபவர்களுக்கு தங்கக்காசு பரிசாக அளிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

தயாரிப்பாளர் பி.என்.பலராம் தன் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் 'கிரிஷ்ணம்'. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

Krishnam Tiktok contest

அக்ஷய் கிருஷ்ணன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். மற்றும் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய் பாபு ,வினீத், ராஜீவ் பணிக்கர், ஜெயகுமார் ,அஞ்சலி உபாசனா ஆகியோரும் நடிக்க படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் நிஜ வாழ்வில் நடந்த குருவாயூர் கிருஷ்ணனின் அற்புதங்கள் இடம் பெறுகின்றன. பிப்ரவரி முதல் வாரத்தில் ரிலீசாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், தங்களது படத்திலுள்ள பாடல்கள் அல்லது காட்சியை டிக்டாக் வீடியோவாக எடுத்து அனுப்புமாறு போட்டி ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. அதில் சிறந்த வீடியோ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை அனுப்பியவர்களுக்கு குருவாயூரப்பன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட 5 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் 9746697883 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தங்களது வீடியோவை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியின் முக்கிய நிபந்தனையாக வீடியோ பதிவிடுபவர்கள், மறக்காமல் #krishnamcontest எனும் ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X