»   »  சல்மான் வேண்டாம், அபிஷேக்கை கட்டிக்கோ: ஐஸ்வர்யா ராய்க்கு அட்வைஸ் செய்தது யார் தெரியுமா?

சல்மான் வேண்டாம், அபிஷேக்கை கட்டிக்கோ: ஐஸ்வர்யா ராய்க்கு அட்வைஸ் செய்தது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சல்மான் கான் வேண்டாம் என்றும், வயதில் சிறியவராக இருந்தாலும் பரவாயில்லை அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்ளுமாறும் ஐஸ்வர்யா ராய்க்கு அறிவுரை வழங்கியது அவர் தந்தை தானாம்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் அவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கு தந்தையாக மட்டும் அல்ல நல்ல தோழனாக, வழிகாட்டியாக இருந்து வருபவர் கிருஷ்ணராஜ் ராய்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

தனது தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் ஐஸ்வர்யா சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அழுது கொண்டு இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

சல்மான்

சல்மான்

ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானை காதலித்தது அனைவருக்கும் தெரியும். சல்மான் உனக்கு வேண்டாம், சரிபட்டு வர மாட்டார் என்று அவருக்கு அறிவுரை வழங்கியது கிருஷ்ணராஜ் ராயாம்.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் தன்னை விட வயதில் சிறியவர் மற்றும் பாலிவுட்டிலும் நமக்கு நிகர் இல்லை அவரை மணப்பதா, வேண்டாமா என்று ஐஸ் குழம்பியபோது அவரை திருமணம் செய்யுமாறு அட்வைஸ் செய்தது கிருஷ்ணராஜ் தான்.

தந்தை செல்லம்

தந்தை செல்லம்

ஐஸ்வர்யா தனது தந்தையின் செல்லமாம். எதுவாக இருந்தாலும் தந்தையிடம் தான் முதலில் கூறுவாராம். திருமணத்திற்கு பிறகும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தந்தையிடம் அறிவுரை கேட்பாராம்.

English summary
According to sources, it was Krishnaraj Rai who advised his daughter Aishwarya Rai to stay away from Salman Khan and to marry actor Abhishek Bachchan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil