எந்திரன் கதை திருட்டு மட்டுமில்ல.. பார்பன திமிரு.. ஷங்கர் செய்த விஷம வேலை..விளாசிய பிரபலம்!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. என்னுடைய கதையைத் திருடி இயக்குநர் ஷங்கர், எந்திரன் படத்தை எடுத்ததாக, அவர் மீது ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கில் ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை எழுத்தாளர் கிருஷ்ணவேல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

எழுத்தாளர் கிருஷ்ணவேல் அறம்நாடு என்கிற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அதில் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் இனிய உதயம் என்கிற பத்திரிக்கையில் நான் எழுதிய கதையை சங்கர் படமாக எடுத்துவிட்டார் என்று எந்திரன் படம் வெளியான போதே வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த படத்திற்காக சங்கருக்கு ஊதியமாக 11.58 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை நஷ்ட ஈடாக தனக்கு கொடுக்க வேண்டும் என வழக்கு பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நீதிமன்றம் எந்திரன் படத்திற்கும் இந்த கதைக்கும் பல ஒற்றுமை உள்ளது என தெரியவந்ததை அடுத்து தற்போது ஷங்கரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

Shankar Enthiran

அது ஹாலிவுட் கதை: ஷங்கர் என் கதை என்கிறார்... ஆருன் தமிழ்நாடான் என் கதை என்கிறார் இதெல்லாம். ஆனால், ஹாலிவுட்டில் 1987ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் making mr right இந்த படத்தின் சாட்சியும் எந்திரன் படத்தின் ஒவ்வொரு சீனும் அப்பட்டமான காப்பி அடித்து படத்தில் வைத்துள்ளார். அதில், எந்திரத்திற்கு மனித பீலிங் வரவேண்டும் என்பதற்காக பல புத்தகத்தை படிக்கும் படி ஒரு சீன் வரும், அந்த சீனில் ஷங்கர் மற்றும் சுஜாதா இருவரும் சேர்ந்து ஒரு சங்கி தனத்தை செய்து இருப்பார்கள். எந்திரன் படித்த புத்தகத்தில் ஆச்சாரக்கோவை என்ற புத்தகத்தை கொடுத்து இருப்பார். ஆச்சாரக்கோவை என்ற புத்தகத்தின் சாராம்சம் என்ன வென்றால், பிராமணரிடம் மற்றவர்கள் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான். அந்த சங்கி தனத்தை சுஜாதா அழகாக செய்து இருந்தார்.

பார்ப்பன சிந்தனை: அதே போலத்தான் எந்திரன் 2 படத்தில் செல்போன் பயன்படுத்துவதால் சிட்டுக்குருவி எல்லாம் இறந்துவிடுகிறது என்று சொல்லி இருப்பார். அதைமட்டும் சொல்லி இருந்தால் பரவாயில்லை, செல்போன் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்கள் கையில் மட்டும் இருந்தால் போதும் என சொல்லி இருப்பார். இதில் தான் நுண் அரசியல் இருக்கிறது.யாருக்கு தேவை... யாருக்கு தேவை இல்லை என்பதை யார் முடிவு செய்வது. பூவிற்பவர்கள், கூலி வேலை செய்பவர்களுக்கு செல்போன் தேவையில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பார். இது தான் பார்பன சிந்தனை என்கிறேன். அதைக்காட்டுவதற்குத்தான் எந்திரன் 2 திரைப்படமே எடுக்கப்பட்டது என எழுத்தாளர் கிருஷ்ணவேல் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

எந்திரன்: ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் நடித்த எந்திரன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, கவிஞர் ஆரூர் தமிழ்நாடான் 2007 ஆம் ஆண்டு ஒரு கதையை எழுதுகிறார். முதலில் சிறுகதையாக எழுதப்பட்டு பின், அது நாவலாக டிக் டிக் தீபிகா என்ற பெயரில் வெளியானது. அந்தக் கதை கிட்டத்தட்ட எந்திரன் கதையோடு ஒற்றின்போன கதையாக இருந்தது. இதனால், ஆரூன் தமிழ்நாடான் என்னுடைய கதையை இயக்குனர் திருடி எந்திரன் என்ற பெயரில் படமாக வெளியிட்டு இருப்பதாக, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X