Krithi Shetty Net Worth: 20 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?.. க்ரித்தி ஷெட்டி சும்மா கலக்குறாரே!

சென்னை: வாரியர், கஸ்டடி படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை க்ரித்தி ஷெட்டி இன்று தனது 20வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அக்மார்க் 2கே கிட் நடிகை என்றால் க்ரித்தி ஷெட்டியைத் தான் சொல்ல வேண்டும்.

மும்பையில் 2003ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி நடிகை க்ரித்தி ஷெட்டி பிறந்தார். 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்த க்ரித்தி ஷெட்டி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதிக்கு மகளாக உப்பென்னா படத்தில் க்ரித்தி ஷெட்டி நடித்து பிரபலமான நிலையில், தமிழில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

Krithi Shetty Birthday Today: Here we look about her net worth and asset details

20 வயது இளம் புயல்: ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தில் இளம் மாணவியாக நடித்து ஸ்கோர் செய்த க்ரித்தி ஷெட்டிக்கு 2021ம் ஆண்டு விஜய்சேதுபதி தெலுங்கில் அறிமுகமான உப்பென்னா படத்தில் அவருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த க்ரித்தி ஷெட்டி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இன்று தனது 20வது பிறந்தநாளை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடி வருகிறார் க்ரித்தி ஷெட்டி.

மிஸ்ஸான சூர்யா படம்: தமிழில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், மகளாக நடித்தவருடன் ஜோடி போட முடியாது என விஜய்சேதுபதி தவிர்த்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிரடியாக பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாக ஒப்பந்தமாகி படத்தில் நடித்து வந்த க்ரித்தி ஷெட்டிக்கு கடைசியில் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதும் அவரும் விலகி விட்ட நிலையில், அந்த வாய்ப்பு மிஸ் ஆனது.

வெங்கட் பிரபு இயக்கத்தில்: லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக தமிழ், தெலுங்கு படமாக உருவான தி வாரியர் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த க்ரித்தி ஷெட்டிக்கு முதல் படமே தோல்விப் படமாக அமைந்தது. ஆனாலும், கோலிவுட்டில் எப்படியாவது முன்னணி நடிகையாக மாற வேண்டும் என நினைத்த க்ரித்தி ஷெட்டி வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த கஸ்டடி படத்தில் நடித்தார். ஆனால், கஷ்ட காலம் க்ரித்தி ஷெட்டியை 7.30 என்ன விட்டுப் போகாது என்றே துரத்தி அடித்தது.

Krithi Shetty Birthday Today: Here we look about her net worth and asset details

க்ரித்தி ஷெட்டியின் சொத்து மதிப்பு: புதிய படங்களில் நடிக்க 75 லட்சம் முதல் 80 லட்சம் வரை க்ரித்தி ஷெட்டி வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷியாம் சிங்கா ராய் க்ரித்திக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அடுத்ததாக ஜெயம் ரவியின் ஜீனி படத்திலும் நடித்து வருகிறார்.

சுமார் 10 படங்களில் நடித்துள்ள க்ரித்தி ஷெட்டி 20 வயதில் 4 கோடி ரூபாய்க்கு அதிபதியாக மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் க்ரித்தி ஷெட்டிக்கு வீடுகள் இருப்பதாக கூறுகின்றனர். ஹேப்பி பர்த்டே க்ரித்தி ஷெட்டி ஜீனி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X