Krithi Shetty- கார்த்திக்கு ஜோடியாகும் கீர்த்தி.. அடடா ஒருவழியா தமிழுக்கு வந்துட்டாங்க
சென்னை: Karthi (கார்த்தி) சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி அடுத்ததாக கார்த்தியை வைத்து படம் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கவிருக்கிறார். ஜப்பான் படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி.
பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்தி. முதல் படமே அவரது நடிப்புக்கு சவாலான படமாக இருந்தாலும் அதை மிகச்சிறப்பாகவே செய்தார். இதனால் பருத்திவீரனில் இருந்தே கார்த்தி கவனிக்கப்படும் நடிகராக மாறினார். அதற்கு அடுத்ததாக அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், பையா போன்ற படங்களும் ஹிட்டடிக்க முதல் மூன்று படங்களிலேயே முன்னணி ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார் கார்த்தி.

கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டு: கார்த்திக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. அவர் நடித்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்களும் மெகா ஹிட்டாகின். அதுமட்டுமின்றி மூன்று படங்களுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரம் எல்லோருக்கும் ஃபேவரைட் என்பதால் கார்த்தியை மேலும் பலர் ரசிக்க ஆரம்பித்தனர்.
கார்த்தி நடிக்கும் ஜப்பான் படம்: கார்த்திக்கு இந்த வருடம் பொன்னியின் செல்வன் 2 படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் மீது அனைவரது எதிர்பார்ப்பும் இருக்கிறது. படம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே அவர் குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்துக்கு ஜப்பான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கார்த்தியின் 25ஆவது படம்: ஜப்பான் படமானது கார்த்திக்கு 25ஆவது படமாகும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் மட்டுமின்றி ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டனும் ஜப்பானில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
கார்த்திக்கு ஜோடியாகும் கீர்த்தி?: ஜப்பான் படத்துக்கு அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் கார்த்தி. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படம் பக்கா கமர்ஷியலாக உருவாகும் என கூறப்படுகிறது. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் என்ற மிகச்சிறந்த படங்களை கொடுத்த நலன் கார்த்தியுடன் இணைந்து கமர்ஷியல் படம் கொடுப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படத்துக்கான பூஜை சமீபத்தில் மிக எளிமையாக நடந்தது. இந்நிலையில் படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பாலா - சூர்யா இணைந்து பணி செய்த வணங்கான் படத்தில் இவர்தான் ஹீரோயினாக கமிட்டாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











