JR 32: சூர்யா மிஸ் ஆனா என்ன ஜெயம் ரவியுடன் ஜோடி போடும் 19 வயது நடிகை.. என்ன டைட்டில் தெரியுமா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக அகிலன் திரைப்படம் வெளியானது. மேலும், இந்த மாதம் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜெயம் ரவியின் 32வது படம் 100 கோடி பட்ஜெட்டில் ஆரம்பமாக உள்ளது. அந்த படத்தை இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்க உள்ளார்.

இந்த படத்துக்காகத்தான் அதிகப்படியாக நடிகர் ஜெயம் ரவி 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி கமிட் ஆகி உள்ளார்.
19 வயது க்ரித்தி ஷெட்டி:
ஹ்ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தில் மாணவியாக நடித்து அசத்திய க்ரித்தி ஷெட்டி தெலுங்கில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த உப்பென்னா படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் படத்தில் நடித்து வந்த க்ரித்தி ஷெட்டி கடைசியில் அந்த படம் டிராப் ஆன நிலையில், ரொம்பவே அப்செட் ஆனார்.
இந்நிலையில், ஜெயம் ரவியுடன் ஜோடி போட்டு மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் 19 வயதே ஆன க்ரித்தி ஷெட்டி. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி உள்ள கஸ்டடி படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஜீனி' தான் டைட்டில்:
ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான் தான் ஜெயம் ரவியின் 32வது படத்துக்கும் இசையமைக்க உள்ளார்.
மேலும், தற்போது இந்த படத்துக்கு 'ஜீனி' என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மிஷ்கினின் உதவி இயக்குநரான புவனேஷ் அர்ஜுனன் சொன்ன கதை ஜெயம் ரவியை வெகுவாக கவர்ந்த நிலையில், அந்த படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தில் அருண்மொழி வர்மனாக அசத்த உள்ள ஜெயம் ரவி இயக்குநர் அகமது இயக்கத்தில் நயன்தாரா உடன் நடித்து வரும் இறைவன் படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீர்த்தி சுரேஷ் உடன்:
மேலும், கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உடன் இணைந்து ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஷிமோகாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் ஜெயம் ரவிக்கு மேலும், சில படக் கதைகளுடன் முன்னணி இயக்குநர்களே வெயிட் செய்து வருவதாகவும் தனி ஒருவன் 2 படத்தை இயக்க மோகன் ராஜாவும் காத்திருப்பதாக கூறுகின்றனர்.
சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்தின் வசூல் வேட்டை அடுத்த அடுத்த படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











