தெலுங்கு படங்கள் பார்த்ததால் என்னை திருமணம் செய்ய பயந்த கிருத்திகா... உதயநிதி கலகல பேச்சு

சென்னை: கலைஞர் கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்தே அவரது குடும்பத்திலிருந்து பலரும் சினிமா துறையில் பணிபுரிந்துள்ளார்கள்.

அவ்வளவு ஏன், இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் கூட ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்ததே.

இந்த வார இறுதியில் உதயநிதி நடித்திருக்கும் கலகத் தலைவன் வெளியாகவுள்ளது. மாமன்னன் மற்றும் கமல் ஹாசனின் படங்களுக்கு பிறகு நடிப்பதை நிறுத்தப் போகிறேன் என உதயநிதி அறிவித்துள்ளார்.

 சட்டமன்ற உறுப்பினர்

சட்டமன்ற உறுப்பினர்

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பணியாற்றும் உதயநிதி, படங்களில் நடித்தால் தனது அரசியல் பணியை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் நடிப்பதிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்திருக்கிறார். மாமன்னன்தான் அவருடைய கடைசி திரைப்படம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்திற்காக உதயநிதியை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

 இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

பலரும் உதயநிதியிடம் சைக்கோ 2, மாமன்னன் 2, நெஞ்சுக்கு நீதி 2, ஒரு கல் ஒரு கண்ணாடி 2 என்று இரண்டாம் பாகங்களை எடுக்கச் சொல்லி கேட்கிறார்களாம். ஆனால் ராஜ்கமல் படத்திற்கு பிறகு தனது ஃபோன் நம்பரை மாற்றிவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக உதயநிதி அறிவித்துவிட்டார். இன்னொரு முக்கியமான காரணம் உதய் சினிமாவில் நடிப்பது அவரது அம்மாவிற்கு பிடிக்கவில்லையாம்.

இருப்பினும் ஸ்டாலின் அவர்களும், கிருத்திகாவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாம்.

 கல்லூரியில் காதல்

கல்லூரியில் காதல்

கல்லூரியில் படிக்கும்போது தனது காதலை உதயநிதி கிருத்திகாவிடம் கூறியபோது, முதலில் கிருத்திகா அவரது காதலை ஏற்றுக் கொள்ள தயங்கினாராம். காரணம், பெரிய அரசியல் குடும்பம் அது மட்டுமின்றி அப்போது நிறைய தெலுங்கு படங்கள் பார்த்துவிட்டு அரசியல்வாதிகள் என்றாலே பெண்களை தூக்கிச் சென்று கற்பழித்து விடுவார்கள் என்ற அச்சம் கிருத்திகாவிற்கு இருந்ததாம்.

 பின்னர் சம்மதம்

பின்னர் சம்மதம்

அதனால், அரசியல் குடும்பத்தில் இருக்கும் உதய் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட்டால் அவரும் அதேபோல செய்வார் என பயந்தாராம். சினிமாவில்தான் அப்படியெல்லாம் காட்டுகிறார்கள், நிஜத்தில் அப்படி இல்லை என உதயநிதி புரிய வைத்த பின்புதான் கிருத்திகா சம்மதித்தாராம், அதுவும் அரசியலுக்கு போகக்கூடாது என்ற நிபந்தனையுடன். பிற்காலத்தில் சூழ்நிலையை புரிந்து கொண்டு கிருத்திகாவே அரசியலுக்கு போக சம்மதித்ததாகவும், தனக்கு படப்பிடிப்பு இருக்கும்போது கிருத்திகா தனது தொகுதி மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கிறார் எனவும் உதயநிதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X