அப்போ பிரபாஸ் இல்லையா.. படம் ஃபிளாப் ஆகியும் அந்த நடிகர் கூட சுற்றும் க்ரித்தி.. என்ன நடக்குது?

மும்பை: பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் பிரபல நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் பிரபாஸ் உடன் ஆதிபுருஷ் படத்தில் சீதாவாக நடித்துள்ளார் நடிகை க்ரித்தி சனோன்.

அந்த படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், க்ரித்தி சனோன் மற்றும் பிரபாஸ் இருவரும் காதலிக்கின்றனரா என வதந்திகள் கிளம்பின.

க்ரித்தி சனோன்

க்ரித்தி சனோன்

கடந்த 2014ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹீரோபன்டி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை க்ரித்தி சனோன். தெலுங்கில் அதே ஆண்டு வெளியான நெனொக்கடின் படத்திலும் இவர் நடித்திருந்தார். கலங்க், பானிபட், மிமி உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து வந்த க்ரித்தி சனோன் சமீபத்தில் செஷாதா படத்திலும் நடித்திருந்தார்.

அலா வைகுந்தபுரமுலோ ரீமேக்

அலா வைகுந்தபுரமுலோ ரீமேக்

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்த அலா வகுகுந்தபுரமுலோ படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்கான செஷாதா சமீபத்தில் வெளியான நிலையில், படு தோல்வியை சந்தித்தது. அந்த படத்தில் கார்த்திக் ஆர்யானுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்திருந்தார்.

புல் புலாயா 2 பிளாக்பஸ்டர்

புல் புலாயா 2 பிளாக்பஸ்டர்

கடந்த ஆண்டு கார்த்திக் ஆர்யான் நடிப்பில் இந்தியில் வெளியான புல் புலாயா 2 திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திக் ஆர்யானுக்கு ரீமேக் படம் கை கொடுக்கவில்லை.

க்ரித்தி சனோன் உடன் டேட்டிங்

க்ரித்தி சனோன் உடன் டேட்டிங்

புல் புலாயா 2 திரைப்படம் ஹிட் அடித்த போதே க்ரித்தி சனோன் உடன் சேர்ந்து ஸ்பெஷல் பாட்டு ஒன்றுக்கு கார்த்திக் ஆர்யான் டான்ஸ் ஆடி இருந்தார். இந்நிலையில், இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக க்ரித்தி சனோனை ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் டேட்டிங் செய்து வருவதாக பரபரப்பு தகவல்கள் பாலிவுட்டில் கொழுந்து விட்டு எரிகின்றன.

பதட்டமான நடிகை

பதட்டமான நடிகை

சமீபத்தில் நடைபெற்ற ஜீ சினிமா விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை க்ரித்தி சனோனிடம் செய்தியாளர் ஒருவர் பட்டென கார்த்திக் ஆர்யானை பற்றி என்ன நினைக்கிறீங்க என்றே கேள்வி எழுப்பி உள்ளார். திடீரென அப்படியொரு கேள்வியை எதிர்கொண்டதும் பதட்டமான நடிகை க்ரித்தி சனோன், இது இங்கே விவாதிக்க வேண்டிய விஷயமில்லை எனக் கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தது சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பிரபாஸ் உடன் கிசுகிசு

பிரபாஸ் உடன் கிசுகிசு

முன்னதாக பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் நடித்த க்ரித்தி சனோனுக்கும் பிரபாஸுக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், அதனை நடிகை க்ரித்தி சனோன் வெறும் வதந்தி என மறுத்து விட்டார்.

ஃபிளாப் ஆன பின்பும்

ஃபிளாப் ஆன பின்பும்

ஆனால், தற்போது கார்த்திக் ஆர்யானின் செஷாதா படம் ஃப்ளாப் ஆன பின்னரும் அவருடன் இணைந்து வெளி இடங்களுக்கு நடிகை க்ரித்தி சனோன் சென்று வருவது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டதா? என்கிற கேள்வியை ஸ்ட்ராங்காக கிளப்பி உள்ளது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X