ஹீரோயினுடன் நெருங்கிய ஹீரோ: காதலை முறித்துக் கொண்ட நடிகை
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் புதுமுக நடிகையுடன் ஓவர் நெருக்கம் காட்டியதால் அவரின் காதலியான நடிகை க்ரிட்டி சனோன் காதலை முறித்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். அவரும், பாலிவுட் நடிகையுமான க்ரிட்டி சனோனும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் காதல் வாழ்வில் பிரச்சனை என்று கூறப்படுகிறது.
ரப்தா படத்தில் நடிக்கும் போது துவங்கிய காதல் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாம்.

புதுமுக நடிகை
கிசி அவர் மேனி படத்தில் நடித்து வருகிறார் சுஷாந்த் சிங் ராஜ்புட். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் சஞ்சனா சங்கி நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் சுஷாந்த் சஞ்சனாவுடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம். இது குறித்த தகவல் க்ரிட்டி சனோனின் காதுகளை எட்டிய போது அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம்.

க்ரிட்டி சனோன்
சுஷாந்த் சிங் சஞ்சனாவுடன் ரொம்பவே நெருக்கமானது குறித்து அறிந்த க்ரிட்டி சனோன் தனது காதலை முறித்துக் கொண்டுவிட்டாராம். சுஷாந்த் நெருங்கி வருவது சஞ்சனாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். சுஷாந்த் பற்றி அவர் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தாராம். சுஷாந்த் சிங்கின் சேட்டையால் சஞ்சனாவுக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள விருப்பம் இல்லையாம்.

பிரச்சனை
சுஷாந்த் சிங்கால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. உனக்கு எப்பொழுது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்பொழுது சென்றால் போதும் என்று சஞ்சனாவிடம் அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளார்களாம். ஆனால் பிரச்சனை எதுவும் இல்லை, படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது என்கிறார் இயக்குனர் முகேஷ் சப்ரா.

இயக்குனர்
எங்கள் படம் பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை. நாங்கள் ஜம்ஷெத்பூர் மற்றும் ராஞ்சியில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு தற்போது மும்பையில் நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக சேர்ந்து சந்தோஷமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். படப்பிடிப்பு எல்லாம் நிறுத்தப்படவில்லை என்று இயக்குனர் முகேஷ் சப்ரா விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











