கீர்த்தி சுரேஷ் இல்லை.. நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்கப் போவது இவர்தான்!
சென்னை: ராமாயண இதிகாசத்தை தழுவி உருவாகவுள்ள நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்கப் போவது யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாகுபலி படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் நடிகர் பிரபாஸ்.
கடந்த ஆண்டு வெளியான தான்ஹாஜி படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இந்த படத்தை இயக்குகிறார்.

அடுத்த பிரம்மாண்டம்
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 1 மற்றும் 2 படங்கள் இந்தியளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தன. அதற்கடுத்து 200 கோடிக்கும் மேல் அதிக பொருட்செலவில் எடுக்கும் படங்களில் தான் நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்த பிரம்மாண்டமாக ஆதிபுருஷ் படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.

இதிகாச கதை
இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களில் முதன்மையான ராமாயணம் இதிகாச கதையை மையமாக வைத்து உருவாக உள்ளது ஆதிபுருஷ் திரைப்படம். அஜய்தேவ்கன், சைஃப் அலி கான் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான தான்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவத் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

ராமராக பிரபாஸ்
பாகுபலியாக நடித்து மாஸ் காட்டிய நடிகர் பிரபாஸ் அடுத்ததாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காக பிரத்யேகமாக வில் வித்தை பயிற்சி எல்லாம் பெற்று வருகிறார் பிரபாஸ். சலார் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு ஆதிபுருஷ் படப்பிடிப்பில் பிரபாஸ் கலந்து கொள்வார் என தெரிகிறது.

ராவணன்
ராமராக பிரபாஸ் நடிக்கவுள்ள நிலையில், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் தேர்வாகி உள்ளார். தான்ஹாஜி படத்திலும் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்த நிலையில், மீண்டும் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ராவணனாக நடிக்க தனது உடல் எடையையும் அதிகரித்து வருகிறாராம் சைஃப் அலி கான்.

கீர்த்தி சுரேஷ் இல்லை
சீதையாக நடிக்கப் போவது யார் என்கிற போட்டி தான் அடுத்ததாக இந்த படம் தொடர்பாக பேசப்பட்ட விஷயம். பாலிவுட் நடிகை முதல் தென்னிந்திய நடிகைகள் வரை ஏகப்பட்ட நடிகைகள் பெயர் அடிபட்டன. இறுதியாக நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் சீதையாக நடிக்க உள்ளார் என்கிற தகவல்களும் வெளியாகின. ஆனால், கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை.

இவர் தான் சீதை
ஆனால், தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தான்ஹாஜி படத்தில் நடித்த நடிகை க்ரித்தி சனோன் தான் சீதையாக நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் பிரபாஸ் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, இந்த பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மணன் யார் தெரியுமா
பாத்சாலா, ஆகாஷ் வாணி, பதி பத்னி அவுர், ஜெய் மம்மி டி உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் சன்னி சிங் தான் நடிகர் பிரபாஸுக்கு தம்பியாக லக்ஷ்மணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். க்ரித்தி சனோன் மற்றும் சன்னி சிங் இருவரும் இணைந்தது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஓம் ராவத்.


Click it and Unblock the Notifications











