விடாமல் விரட்டும் கோவிட்-19.. பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து பிரபல நடிகை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா காரணமாக, உலக நாடுகள் கடும் சிக்கலை எதிர்நோக்கி உள்ளன. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.
உலகில் மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.

உலக அளவில்
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.79 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் 6 கோடியே 79 லட்சத்து 34 ஆயிரத்து 939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சத்து 50 ஆயிரத்து 169 பேர் பலியாகி உள்ளனர். 4 கோடியே 70 லட்சத்து 07 ஆயிரத்து 284 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.

குறைந்து வருகிறது
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல், கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் கொஞ்சம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் மக்களிடம் பயம் போகவில்லை.

சினிமா பிரபலங்கள்
இந்நிலையில் இந்த கொரோனா பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. நடிகர் அமிதாப் பச்சனில் இருந்து தமன்னா வரை பல சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகை கீர்த்தி சனானுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஷாருக்கின் தில்வாலே
இவர், தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக, நேனொக்கடேன் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். பின்னர் இந்தியில் ஹீரோபன்டி, ஷாருக்கானின் தில்வாலே, அர்ஜுன் பாட்டியாலா, ஹவுஸ்புல் 4, பானிபட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஆதிபுருஷ் சீதை
இப்போது மிமி என்ற படத்தில் வாடகைத் தாயாக நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக இவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், ராஜ்குமார் ராவுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

கொரோனா பாதிப்பு
அதை முடித்துவிட்டு சண்டிகரில் இருந்து மும்பை திரும்பியிருந்தார். இந்நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ஜக் ஜக் ஜீயோ பட ஷூட்டிங்கில் பங்கேற்ற வருண் தாவன், நீது கபூர், இயக்குனர் ராஜ்மேத்தா ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











