பிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாகும் பிரபல இந்தி ஹீரோயின்.. ஜனவரியில் ஷூட்டிங்!

By

சென்னை: பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில், பிரபல இந்தி நடிகை, சீதையாக நடிக்கிறார்.

ராஜமவுலியின் 'பாகுபலி'யில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், நடிகர் பிரபாஸ். இப்போது அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாகி வருகின்றன.

இப்போது அவர், ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார்.

மோஷன் போஸ்டர்

மோஷன் போஸ்டர்

இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஸ்டைலாக ரயில் தொங்கியபடி பிரபாஸும் பூஜாவும் நிற்பது போல அந்த போஸ்டர் வெளியாகி இருந்தது.

இயக்குனர் ஓம்ராவத்

இயக்குனர் ஓம்ராவத்

இதற்கிடையே 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார், பிரபாஸ். இந்திப் பட இயக்குனர் ஓம்ராவத் இயக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். ராமாயணக் காவியத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

சவாலான கேரக்டர்

சவாலான கேரக்டர்

இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகின்றனர். 3டி-யில் உருவாகும் இந்தப் படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டரும் சவாலானது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

வில்லன் சைஃப்

வில்லன் சைஃப்

இந்தப் படத்தில் அவர் ராமராக நடிக்கிறார். இதற்காக அவர், வில்வித்தை பயிற்சி பெறுவதாகக் கூறப்பட்டது. இதில் வில்லனாக பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் நடிக்கிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு அறிவித்தது. அதன்படி, 11.08.2022 அன்று படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

சீதை கீர்த்தி

சீதை கீர்த்தி

இதன் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, பிரபாஸ் ஜோடியாக, அதாவது சீதையாக நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்காக சில நடிகைகளிடம் பேசி வந்தனர். இந்நிலையில் இந்தி நடிகை கீர்த்தி சனான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X