ட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகர்: திரும்பி வந்துடாதீங்கன்னு கெஞ்சிய நெட்டிசன்கள்
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ளார்.
நான் தான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் என்று சொல்லிக் கொள்பவர் கமால் ஆர் கான். ஷாருக்கான் தன்னை எஸ்.ஆர்.கே. என்பதால் தன்னை கே.ஆர்.கே. என்பவர் அவர்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
ட்விட்டர்
நான் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன். இனி ட்வீட் செய்ய மாட்டேன். ஆனால் எனக்கு பிடித்த ட்வீட்டை ரீட்வீட் செய்வேன் என்று தெரிவித்துள்ளார் கே.ஆர்.கே.
விமர்சனம்
விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் பல படங்களை கிழித்து தொங்கவிட்டுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரையும் திட்டித் தீர்த்த கே.ஆர்.கே. ட்விட்டரை விட்டு சென்றது நெட்டிசன்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மீண்டும் வந்துவிட்டார்
ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன் என்று கே.ஆர்.கே. தெரிவித்தது இது முதல் முறை அல்ல. அதனால் அவர் நாளையே மீண்டும் வந்துவிடுவார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
2.0
கே.ஆர்.கே. ட்விட்டரை விட்டு வெளியேறியதால் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கேதர்நாத், ஷாருக்கானின் ஜீரோ, ரன்வீர் சிங்கின் சிம்பா, ரஜினியின் 2.0 படங்கள் தப்பித்தன.


Click it and Unblock the Notifications