»   »  என்னை திட்டிய அந்த 4 பிரபலங்களும் காணாமல் போயிட்டாங்க பாத்தீங்களா?: விமர்சகர் தம்பட்டம்

என்னை திட்டிய அந்த 4 பிரபலங்களும் காணாமல் போயிட்டாங்க பாத்தீங்களா?: விமர்சகர் தம்பட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னுடன் மோதிய பாலிவுட் பிரபலங்கள் தற்போது மார்க்கெட் இல்லாமல் தவிப்பதாக விமர்சகரும், நடிகருமான கேஆர்கே தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் என்று கூறிக் கொள்பவர் நடிகர் கமால் ஆர் கான்(கேஆர்கே). திரையுலக பிரபலங்களை பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னை எதிர்த்த பிரபலங்கள் காணாமல் போய்விட்டதாக கூறியுள்ளார்.

லிசா ஹேடன்

நடிகை லிசா ஹேடன் பப்ளிசிட்டிக்காக என்னை விளாசினார். அவரது சினிமா கெரியர் ஓராண்டில் முடிந்துவிட்டது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கேஆர்கே.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹாவும் பப்ளிசிட்டிக்காக என்னை விளாசினார். அவரது கெரியரும் ஓராண்டில் முடிந்து தற்போது வேலையில்லாமல் வீட்டில் உள்ளார்.

பாபா ராம் ரஹிம்

பாபா ராம் ரஹிம் தனது 50வது பிறந்தநாள் அன்று எனக்கு போன் செய்து தனது புதிய படம் பற்றி எதுவும் தவறாக கூற வேண்டாம் என்றார். அப்படி சொன்ன சில நாட்களில் அவர் சிறைக்கு சென்றுவிட்டார்.

ஸ்ரேயாஸ்

நடிகர் ஸ்ரேயாஸ் தல்பதே பப்ளிசிட்டி மற்றும் தனது படத்திற்காக என்னை விளாசினார். அவரின் போஸ்டர் பாய்ஸ் படம் ஊத்திக் கொண்டது. எதிர்காலத்தில் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.

English summary
Bollywood critic KRK tweeted that Lisa Haydon, Sonakshi, Baba Ram Rahim Singh and Shreyas Talpade's career are over after they abused him for publicity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil