»   »  பர்த்டே அதுவுமா அஜீத்தை எருமை என்ற உளறுவாய், சுயதம்பட்ட நடிகர்

பர்த்டே அதுவுமா அஜீத்தை எருமை என்ற உளறுவாய், சுயதம்பட்ட நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பிறந்தநாள் காணும் அஜீத் குமாரை பாலிவுட்டின் உளறுவாய் நடிகர் கேஆர்கே எருமை என்று கூறி தல ரசிகர்களிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

நான் பாலிவுட் நடிகராக்கும், நம்பர் ஒன் விமர்சகராக்கும் என்று மைக் வைக்காத குறையாக கூறி வரும் கேர்ஆகேவை பாலிவுட்டில் யாரும் மதிப்பதே கிடையாது.

இப்படி ஒரு ஆள் இருப்பதை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் அவர் விளம்பரம் தேட பெரிய நடிகர்களை வம்பிழுத்து வருகிறார்.

அஜீத்

கோலிவுட்டின் உண்மையான எருமை அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தெற்கில் யார் யார் எல்லாம் ஹீரோவாக உள்ளனர் பாரேன் என்று திமிராக ட்வீட்டியுள்ளார் கேஆர்கே.

அர்ஜுன்

பாய் ஜான் அர்ஜுன் அஜீத் ஸ்டாராகியுள்ளார் என்றால் நீங்கள் சூப்பர் ஸ்டார் என்று உளறியுள்ளார் கேஆர்கே.

திட்டு

திட்டு

அஜீத்தை வம்புக்கு இழுத்துள்ள கேஆர்கேவை தலயின் டப்பிங் படத்தை பார்த்த இந்தி ரசிகர்கள் கூட கோபம் அடைந்து அந்த ஆளை திட்டியுள்ளனர்.

ரஜினி

ரஜினி

அழகே இல்லாத ரஜினி எல்லாம் சூப்பர் ஸ்டாரா என்று கேஆர்கே முன்பு கேட்டிருந்தார். அண்மையில் மோகன்லாலை சோட்டா பீம் என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
KRK has tweeted that, 'Happy Birthday to real Bhainsa of Kollywood #ThalaAjith! Lol! Kaise Kaise Hero hai South Main!'. Ajith fans blast this man on twitter.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil