»   »  அழகில்லா ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாரா?: பாலிவுட் நடிகர் திமிர் ட்வீட்

அழகில்லா ரஜினி பெரிய சூப்பர் ஸ்டாரா?: பாலிவுட் நடிகர் திமிர் ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அழகு மற்றும் கட்டுடல் தான் ஸ்டார் ஆக தகுதி என்றால் பார்க்க சிறியதாக அழகில்லா ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கக் கூடாது என்று பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் என்கிற கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் ஷாருக்கான் தன்னை எஸ்ஆர்கே என்று கூறுவதற்கு போட்டியாக தன்னை கேஆர்கே என்கிறார். தன்னை விமர்சகராக கருதி படங்களை விமர்சித்து வருகிறார்.

ட்விட்டரில் யாரையாவது வம்பு இழுக்கவும் பெயர் போனவர் என்று பாலிவுட்டில் கூறுகிறார்கள்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தமிழக ரசிகர்கள் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார், தலைவர் என்று தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கேஆர்கேவோ ரஜினிகாந்தை ட்விட்டரில் வம்பிழுத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்

அழகு மற்றும் கட்டுடல் தான் ஸ்டார் ஆக தகுதி என்றால் பார்க்க சிறியதாக அழகில்லா ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கக் கூடாது என கேஆர்கே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏழறை

ஏழறை

பாலிவுட்டில் யாரையாவது வம்புக்கு இழுத்து ஏழறையை கூட்டி வந்த கேஆர்கே தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமர்சித்து தலைவர் ரசிகர்களை வம்பிழுத்துள்ளார்.

மாஹிரா கான்

பாகிஸ்தானை சேர்ந்த அழகிய நடிகை ஜீபா பக்தியாரை நடிக்க வைத்தால் புரிந்து கொள்வேன். ஆனால் வீணாகப் போன மாஹிரா கானை நடிக்க வைப்பது புரியவில்லை என இன்று மாஹிராவை ட்விட்டரில் வம்பிழுத்துள்ளார் கேஆர்கே.

English summary
Bollywood actor KRK tweeted that, 'If good looks+good Body are qualifications to become a star then a tiny n worst looking Rajnikant should not be biggest super star today.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil