முதல் நாள் ரூ.25 கோடி, மறுநாள் ரூ.23 கோடி வசூல்: கலக்கும் 'க்ரிஷ் 3'
மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் 3 வசூலை அள்ளிக் குவிக்கிறது.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்த படம் க்ரிஷ் 3. ரூ.100 முதல் ரூ.150 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.
கோய் மில் கயா, க்ரிஷ் படத்தின் தொடர்ச்சியான க்ரிஷ் 3 பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

முதல் நாள்
க்ரிஷ் 3 ரிலீஸான அன்று ரூ.25 கோடி வசூல் செய்துள்ளது. க்ரிஷ் 3 படத்தில் ரித்திக் டாக்டரின் அறிவுரையையும் மீறி சில ரிஸ்கான காட்சிகளில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாள்
படம் ரிலீஸான மறுநாள் அதாவது கடந்த சனிக்கிழமை அன்று மட்டும் ரூ.23 கோடி வசூலாகியுள்ளது. படத்தை தயாரித்து இயக்கியது வேறு யாருமல்ல ரித்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் தான்.

ஷாருக்கான்
ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டெர்டெயின்மென்டின் ஒரு பிரிவான ரெட் சில்லீஸ் விஎஃப்எக்ஸ் க்ரிஷ் 3 படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸை கவனித்துக் கொண்டது.

புதிய சாதனை படைக்கும்
க்ரிஷ் 3 வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரிலீஸாவதற்கு முன்பே இது நிச்சயம் ஹிட் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











