twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்ஸ் ஆபிஸை பிரித்து மேயும் 'க்ரிஷ் 3'.... 4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

    By Siva
    |

    மும்பை: ரித்திக் ரோஷன் நடித்த இந்தி படமான க்ரிஷ் 3 ரிலீஸான நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. அதிலும் ஒரே நாளில் இதுவரை எந்த இந்தி படமும் செய்யாத வசூலை செய்துள்ளது க்ரிஷ் 3.

    ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா நடித்த க்ரிஷ் 3 கடந்த 1ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸான அன்று ரூ. 25.20 கோடியும், மறுநாள் ரூ.23.20 கோடியும் மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ.24.30 கோடியும் வசூல் செய்தது.

    இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் க்ரிஷ் 3 ரூ.35.9 கோடி வசூல் செய்துள்ளது.

    4 நாளில் ரூ.100 கோடி

    4 நாளில் ரூ.100 கோடி

    க்ரிஷ் 3 ரிலீஸான நான்கே நாட்களில் ரூ. 108.7 கோடி வசூல் செய்துள்ளது.

    சென்னை எக்ஸ்பிரஸ்

    சென்னை எக்ஸ்பிரஸ்

    ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரே நாளில் ரூ. 33.1 கோடி வசூல் செய்தது தான் ஒரு நாள் வசூலில் அதிகபட்ச தொகையாக இருந்தது. தற்போது ரூ.35.9 கோடி வசூல் செய்து பாலிவுட் வரலாற்றிலேயே எந்த ஒரு படமும் செய்யாத அளவுக்கு ஒரு நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது க்ரிஷ் 3.

    விரைவில் ரூ.200 கோடி

    விரைவில் ரூ.200 கோடி

    இதே வேகத்தில் க்ரிஷ் 3 வசூல் செய்தால் விரைவில் ரூ.200 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்ஜெட்

    பட்ஜெட்

    க்ரிஷ் 3 படத்தின் பட்ஜெட் ரூ.100 முதல் ரூ.150 கோடி ஆகும். இந்த படத்தில் ரித்திக் ரிஸ்க் எடுத்து பல காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Hrithik Roshan starrer Krrish 3 has collected Rs.108 crore in just four days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X