படையப்பா இயக்குநருக்கு பிறந்தநாள்.. கே.எஸ். ரவிக்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சென்னை: கேப்டன் ஆஃப் தி ஷிப் கே.எஸ். ரவிக்குமார் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1958 ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி திருவள்ளூரில் பிறந்தவர் கே எஸ் ரவிக்குமார். பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ரங்கராஜ் உள்ளிட்ட பலருடன் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை ஒட்டுமொத்தமாக கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான கே.எஸ். ரவிக்குமார் சரத்குமாரை வைத்து சேரன் பாண்டியன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்றார். புத்தம் புதுப்பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன், புருஷ லட்சணம், சக்திவேல் என வரிசையாக மூன்று ஆண்டுகளில் பல படங்களை இயக்கினார்.

1994 ஆம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறி தமிழ்நாட்டு அரசின் சிறந்த திரைப்படம் மற்றும் இயக்குனர் விருதைப் பெற்றுத் தந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து முத்து, படையப்பா, லிங்கா போன்ற பல படங்களை இயக்கிய கே. எஸ். ரவிக்குமார் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாக உள்ளார்.
ஹேப்பி பர்த்டே கே.எஸ். ரவிக்குமார்: தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநரான கே எஸ் ரவிக்குமார் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள ஹிட் லிஸ்ட் திரைப்படம் நாளை வெளியாகிறது. இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

பல வெற்றி படங்கள்: நாட்டாமை படத்தை இப்போது பார்த்தாலும் ரசிகர்கள் ஒரு காட்சியில் கூட போர் அடிக்கிறது என்று சொல்ல மாட்டார்கள். அந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் படத்தைக் கொண்டாட தியேட்டருக்கு படையெடுத்து விடுவார்கள். அதேபோல ரஜினிகாந்தை வைத்து முத்து படத்தை இயக்கி சூப்பர் ஸ்டாருக்கு ஜப்பானிலேயே ரசிகர்களை பெற்றுத் தந்தவர் கே.எஸ். ரவிக்குமார். படையப்பா படம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனை வைத்து தசாவதாரம் படத்தை இயக்கி ஒட்டுமொத்த திரையுலகத்தையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார். நடிகர் விஜய்யை வைத்து மின்சாரக் கண்ணா படத்தையும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கி இருந்தார். அஜித்தை வைத்து வில்லன், வரலாறு என வேற லெவல் படங்களையும் கொடுத்தவர் இவர்தான்.
ஏகப்பட்ட வீடுகள்: திருவள்ளூரில் பிறந்து வளர்ந்த கே.எஸ். ரவிக்குமார் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக மாறிய நிலையில் அதிக சம்பளம் வாங்கி வந்தார். சென்னையில் பல்வேறு இடங்களில் அவருக்கு பிரம்மாண்ட பங்களாக்கள் உள்ளன. இரண்டே முக்கால் ஏக்கரில் கப்பல் போல வீடு கட்டி வசித்து வருகிறார் கே.எஸ். ரவிக்குமார்.
கே.எஸ். ரவிக்குமார் குடும்பம்: கேப்டன் ஆஃப் தி ஷிப் கே.எஸ். ரவிக்குமார் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1958 ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி திருவள்ளூரில் பிறந்தவர் கே எஸ் ரவிக்குமார். பாரதிராஜா, விக்ரமன், நாகேஷ், ரங்கராஜ் உள்ளிட்ட பலருடன் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமாவை ஒட்டுமொத்தமாக கற்றுக்கொண்டு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

சொத்து மதிப்பு: அப்பவே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக மாறிய கே.எஸ். ரவிக்குமார் தனது வருமானத்தை சரியாக பயன்படுத்தி வந்த நிலையில் ஏகப்பட்ட சொத்துக்களை சேர்த்துள்ளார். இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உள்ள கே. எஸ். ரவிக்குமாருக்கு ஒட்டுமொத்தமாக 70 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை உயர்ந்த கார்களையும் அவர் வைத்திருப்பதாக கூறுகின்றனர். அவர் தயாரிப்பில் வெளியாகியுள்ள ஹிட் லிஸ்ட் திரைப்படம் வெற்றி அடைவதற்காக சமீபத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களை சந்தித்து வந்தார்.


Click it and Unblock the Notifications











