ரஜினியை அடுத்து இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோச்சடையானை அடுத்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக கோலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.
இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனேவை வைத்து ராணா படத்தை இயக்கவிருந்தார். ஆனால் படப்பிடிப்பின் முதல் நாளன்று ரஜினிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை செய்த பிறகு தான் அவருக்கு உடல் நலம் தேறியது.
உடல் நலம் தேறிய பிறகு அவர் தனது இளைய மகள் இயக்கத்தில் நடிக்க தீர்மானித்தார்.

கோச்சடையான்
சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினி, தீபிகா நடித்துள்ள கோச்சடையான் பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. படம் வரும் ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

கே.வி. ஆனந்த் அல்ல கே.எஸ். ரவிக்குமார்
கோச்சடையான் வேலை முடிந்துவிட்டதால் ரஜினி அடுத்த படம் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் அவர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தி என்று தெரிய வந்தது. இந்நிலையில் அவர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக பேச்சாகக் கிடக்கிறது.

மீண்டும் வரும் ராணா
ரவிக்குமார் சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ரஜினியை வைத்து மீண்டும் ராணா படத்தை எடுக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











