கமல் படத்திற்கு பெயர் வைத்த சூப்பர்ஸ்டார்... பாராட்டிய கேஎஸ் ரவிக்குமார்!

சென்னை : சூப்பர்ஸ்டாரின் படையப்பா படம் தற்போது 23 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த விஷயம் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் கேஎஸ் ரவிக்கும் சூப்பர்ஸ்டார் குறித்த விஷயங்களைச சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பல வெற்றிப் படங்கள் வந்துள்ளன. ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளன. ஆனால் அவரது கேரியரில் சிறப்பான படமாக இன்றளவும் கருதப்படுவது படையப்பா. இந்தப் படத்தில் மாஸ் காட்டியிருப்பார் ரஜினி. படத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் உருவானது.

படையப்பா படம்

படையப்பா படம்

படத்தை இயக்கியிருந்தார் கேஎஸ் ரவிக்குமார். அந்த நேரத்தில் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களை இவர் தொடர்ந்து இயக்கினார். ஆனால் இவரது கேரியரிலும் மைல்கல்லாக இன்றளவும் உள்ள படம் என்றால் அது படையப்பா தான். காட்சிக்கு காட்சி ரஜினியின் வசீகரம் படத்தில் அதிகமாக இருந்தது.

ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்த ரஜினி

ஸ்டைலால் ரசிகர்களை கவர்ந்த ரஜினி

படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. ரஜினி தன்னுடைய ஸ்டைல் உள்ளிட்டவற்றால் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அவருக்கு படத்தில் சிறப்பான சவாலாக இருந்தார் ரம்யா கிருஷ்ணன். இவரது கேரக்டர் படத்தில் மிகவும் வலிமையாக காணப்படும். இவர் பேசும் டயலாக்குகளும் மிகவும் சிறப்பாக அமைந்தது.

அழகான சவுந்தர்யா

அழகான சவுந்தர்யா

இதையடுத்து படத்தில் மிகவும் அழகாக காட்டப்பட்டிருந்தார் சவுந்தர்யா. இவர் சீக்கிரத்திலேயே உயிரிழந்தது அவரது ரசிகர்களுக்கு இன்றளவும் சோகத்தை தரும் விஷயமாக உள்ளது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் சவுந்தர்யாவை வேலைக்காரி என்று குத்திக் காட்டுவதை ரஜினி சிறப்பாக சமாளிப்பார்.

நினைவலைகளை பகிர்ந்த கேஎஸ் ரவிக்குமார்

நினைவலைகளை பகிர்ந்த கேஎஸ் ரவிக்குமார்

ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி உள்ளிட்ட அனைவரும் இந்தப் படத்தில் சிறப்பாக காணப்படுவார்கள். இந்நிலையில் தற்போது கூகுள் குட்டப்பா படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் ரஜினி குறித்து கேஎஸ் ரவிக்குமார் சிறப்பான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

தெனாலியை தயாரித்த கேஎஸ் ரவிக்குமார்

தெனாலியை தயாரித்த கேஎஸ் ரவிக்குமார்

கமலின் தெனாலி படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய நிலையில், அந்தப் படத்தை தயாரிக்க கமல் கேட்டுக் கொண்டதாக ரஜினியிடம் தான் கூறியதாகவும், அப்போது உடனடியாக அதை செய்யும்படி அவர் கூறியதாகவும், கமலே கூறிய பின்பு அதில் யோசிக்க என்ன இருக்கிறது என்று தனக்கு ரஜினி அறிவுறுத்தியதாக கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தெனாலி டிஸ்கஷனில் ரஜினி

தெனாலி டிஸ்கஷனில் ரஜினி

தொடர்ந்து ஹேராம் தாமதத்தால் தன்னுடைய தெனாலி படம் தாமதமானதாகவும் தன்னை மாட்டி விட்டதாக கருதியதாலோ என்னவோ அடிக்கடி தனது ஆபிசிற்கு ரஜினி தொடர்ந்து வந்ததாகவும் தெனாலி படத்தின் டிஸ்கசனில் பங்கேற்றதாகவும் தெனாலி என்று படத்திற்கு அவர்தான் பெயர் வைத்ததாகவும் தனது நினைவலைகளை கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X