லிங்காவில் அறிமுகமாகும் புதிய எடிட்டர் சம்ஜித்!
தமிழ் சினிமாவுக்கு இன்னும் ஒரு படத் தொகுப்பாளரை அறிமுகம் செய்கிறார் கே எஸ் ரவிக்குமார், ரஜினியை வைத்து தான் இயக்கும் லிங்கா படத்தில்.
அவர் பெயர் சம்ஜித். தமிழுக்குதான் இவர் புதியவரே தவிர, ஏற்கெனவே மலையாளத்தில் கேரளா கபே, ப்ளாக்பெர்ரி போன்ற ஹிட் படங்களில் பணியாற்றியவர்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய போலீஸ் கிரி படத்துக்கும் இவர்தான் எடிட்டர்.
லிங்கா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்துக்கான எடிட்டிங் வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டனர். 20 சதவீத படம் முடிந்துவிட்டதாக சம்ஜித் தெரிவித்துள்ளார்.
லிங்கா படத்தை சீக்கிரமே திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதால், தனது வேகத்துக்கேற்ப பணியாற்றும் சம்ஜித்தை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டாராம் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.


Click it and Unblock the Notifications











