வாவ்.. ’விக்ரம் 58’ல் இணைந்த பிரபல இயக்குநர்!
Recommended Video
சென்னை: டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் 'விக்ரம் 58' படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் இணைந்துள்ளார்.
ஏற்கனவே விக்ரமுக்கு வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் கான் இணைந்துள்ள நிலையில், 'விக்ரம் 58' படத்தில் இன்னொரு பிரபலமும் இணைந்துள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகவும் வித்தியாசமாக உருவாகி வரும் 'விக்ரம் 58' படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம்.

விக்ரம் 58
7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 இணைந்து தயாரித்து வரும் ‘விக்ரம் 58' படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடித்து வரும் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் சியான் விக்ரம் தோன்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் அந்த பிரபலம்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தான் 'விக்ரம் 58'ல் இணைந்துள்ளார். ஹரி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா நடிப்பில் வெளியான அருள் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த கே.எஸ். ரவிக்குமார், நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விக்ரமுடன் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் சென்டிமென்ட்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் மிரட்டல் வில்லனாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்திருந்தார். இந்நிலையில், 'விக்ரம் 58' படத்திலும் பிரபல இயக்குநரான கே.எஸ். ரவிக்குமாரை அஜய் ஞானமுத்து களமிறக்குகிறார்.

பிஸி
கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளார். மேலும், கெளதமன் மேனனின் பிரச்சனைகள் தீர்ந்துள்ள நிலையில், துருவ நட்சத்திரம் படத்திலும் விக்ரம் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, மகன் துருவ் விக்ரமின் அறிமுக படமான ஆதித்ய வர்மா படத்தின் புரமோஷனுக்கும் விக்ரம் அவ்வப்போது சென்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











