நேற்று ரஜினி பேட்டி கொடுத்தது தெரியும், இவரை சந்தித்தது தெரியுமா?
Recommended Video

சென்னை: மும்பை கிளம்பிச் செல்லும் முன்பு ரஜினிகாந்த் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரை சந்தித்து பேசியுள்ளார்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் பூஜை இன்று காலை மும்பையில் நடைபெற்றது. படப்பிடிப்பு மும்பையில் தான் நடக்கிறது.
மும்பை கிளம்பிச் செல்லும் முன்பு ரஜினியை இயக்குநர் ரவிக்குமார் சந்தித்துள்ளார்.
நமக்குள்ள சாரி, தேங்க்ஸ்.. வேணாம்ங்க... ஒரு கப் காபி போதும் ... ஆஹா குஷ்பூ ரொமான்ஸ்!

ரஜினிகாந்த்
போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

நட்பு
கே. எஸ். ரவிக்குமார், ரஜினிகாந்த் கடைசியாக சேர்ந்து பணியாற்றிய படம் லிங்கா. ரவிக்குமார் ஒன்று புதுப்படம் தொடர்பாக ரஜினியை சந்தித்து பேசியிருக்கலாம் இல்லை என்றால் நட்பு ரீதியாக அவரை வாழ்த்தியிருக்கலாம். அவர்கள் சேர்ந்து படம் பண்ணினால் நமக்கு சொல்லாமலா போய்விடுவார்கள்?

படையப்பா
ரஜினிகாந்தை வைத்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய சூப்பர் ஹிட் படமான படையப்பா ரிலீஸாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை கொண்டாடக் கூட அவர்கள் சந்தித்திருக்கலாம்.

நீலாம்பரி
படையப்பாவை மறக்கத்தான் முடியுமா?. இல்லை அந்த நீலாம்பரியை தான் மறக்க முடியுமா?. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படமாச்சே படையப்பா. ரஜினியும், கே. எஸ். ரவிக்குமார் மீண்டும் ஒன்று சேர்ந்தால் படையப்பா போன்ற மாஸ் படத்தை கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











