ரஜினி, கமல் கூட இல்லை அஜீத்தும், பாலகிருஷ்ணாவும் தான்..: ரவிக்குமார் புகழாரம்
Recommended Video

சென்னை: அஜீத் பற்றிய சுவராஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்.
பாலகிருஷ்ணா, நயன்தாராவை வைத்து கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள தெலுங்கு படம் ஜெய் சிம்ஹா. படம் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
நயன்தாரா, பாலகிருஷ்ணா ஜோடியாக நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அஜீத்
ஜெய் சிம்ஹா நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ். ரவிக்குமார் பாலகிருஷ்ணா, அஜீத் குமார் ஆகியோருக்கு இடையே இருக்கும் ஒரு ஒற்றுமை குறித்து தெரிவித்துள்ளார்.

அந்தஸ்து
நான் இதுவரை பணியாற்றிய நடிகர்கள் தங்களின் ஸ்டார் அந்தஸ்திற்கு ஏற்றது போன்று வசனம் உள்ளிட்ட எதையாவது மாற்றச் சொல்லியுள்ளனர். நானும் அவ்வாறே செய்திருக்கிறேன். அதை நான் குறை சொல்ல மாட்டேன் என்று ரவிக்குமார் கூறியுள்ளார்.

நற்குணம்
வசனத்தை மாற்றுங்கள், அதை மாற்றுங்கள் என்று இதுவரை என்னிடம் கேட்காதது இரண்டே இரண்டு நடிகர்கள் மட்டுமே. தெலுங்கு திரையுலகில் பாலகிருஷ்ணா, தமிழ் திரையுலகில் அஜீத் என்கிறார் ரவிக்குமார்.

மாற்றம்
நீங்கள் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளீர்களோ அப்படி செய்யுங்கள். நாங்கள் நடித்துக் கொடுக்கிறோம் என்று பாலகிருஷ்ணாவும், அஜீத்தும் தான் கூறினார்கள் என்று ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











