கே.எஸ். ரவிக்குமார் படத்தில் நடித்துவிட்டு ஜெயிலுக்கு போன போலீஸ்
மும்பை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள முதல் இந்தி படமான போலீஸ்கிரியில் நடித்து முடித்துவிட்டு சஞ்சய் தத் சிறைக்கு சென்றார்.
இயக்குனர் ஹரிக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் சாமிக்கு முக்கியமான இடம் உண்டு. சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்த த்ரிஷாவுக்கு லேசா லேசா, மனசெல்லாம் ஆகிய படங்கள் ஓடாததால் பேசாமல் திரையுலகை விட்டு போய்விடலாம் என்று நினைத்தார். அப்போது தான் சாமி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து த்ரிஷா நடிப்பைத் தொடர்ந்தார். கடந்த 2003ம் ஆண்டு வெளியான சாமி படத்தை 10 ஆண்டுகள் தற்போது இந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.

பாலிவுட் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார்
தமிழில் வெற்றி கண்ட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சாமி படத்தை இந்தியில் போலீஸ்கிரி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இது தான் அவரது முதல் இந்தி படம்.

54 வயதில் போலீஸ் ஹீரோ
போலீஸ்கிரி படத்தில் 54 வயதாகும் சஞ்சய் தத் ஹீரோவாக நடித்துள்ளார். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன்பு அவர் இந்த படத்தை நடித்துக் கொடுத்துவிட்டு சென்றார். படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் பிராச்சி தேசாய் நடித்துள்ளார். கோட்டா ஸ்ரீனிவாஸ ராவ் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்.

37 வயதில் விக்ரம் நடித்தார்
சாமி படத்தில் விக்ரம் நடித்தபோது அவருக்கு 37 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 5ம் தேதி ரிலீஸ்
போலீஸ்கிரி வரும் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











